ஷங்கர்
ஷங்கர் இன்று இந்தியாவே கொண்டாடும் பிரமாண்ட இயக்குனர், ஆனால், இவர் உதவி இயக்குனராக இருந்த போது வசந்த ராகம், சீதா ஆகிய படங்களில் கெஸ்ட் ரோலில் வந்து சென்றுள்ளார்.
முருகதாஸ்
முருகதாஸும் தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட் திரையுலகமே சிவப்பு கம்பளம் இட்டு வரவேற்கும் ஒரு இயக்குனர், இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் வெயிட்டிங், இந்நிலையில் இவர் மதுரை மீனாட்சி என்ற படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் வந்து சென்றுள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா
இவர் நடிப்பதற்காகவே சினிமாவிற்கு வந்தவர், ஆனால், உதவி இயக்குனராக சினிமாவில் காலடி எடுத்து வைத்து அஜித், விஜய் என முன்னணி நடிகர்களை இயக்கியவர், இவர் கிழக்கு சீமையிலே, ஆசை ஆகிய படங்களில் ஒரு காட்சியில் தோன்றுவார்.
வெற்றிமாறன்
தமிழ் சினிமாவிற்கு பல தேசிய விருதுகளை வாங்கி தந்தவர் வெற்றிமாறன். இவர் காதல் வைரஸ் என்ற படத்தில் உதவி இயக்குனராகவே ஒரு காட்சியில் வந்து செல்வார்.
விஷ்ணுவர்தன்
தல அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் என மெகா ஹிட் படங்களை கொடுத்து விஷ்ணுவர்தன் ஏற்கனவே சினிமா பேமிலி தான் என்றாலும், இவர் தம்பி தான் நடிகராகியுள்ளார், ஆனால், விஷ்ணுவர்தனும் ஒரு படத்தில் நடித்துள்ளார், மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் நடித்து சிறுவர்களில் இவரும் ஒருவர்.
கௌதம் மேனன்
இவர் மார்டன் கே.எஸ்.ரவிக்குமார் இவர் நடிக்கும் படத்தில் எப்படியாவது ஒரு சீனாவது தலையை காட்டிவிடுவார், அந்த வகையில் இவர் முதன் முதலாக உதவி இயக்குனராக ஆனதுமே, மின்சாரகனவு படத்தின் ஓப்பனிங் காட்சியில் வந்து செல்வார்.
பாக்யராஜ்
பாக்யராஜை தற்போது வேண்டுமானால் பெரிய நடிகர், இயக்குனராக தெரிந்திருக்கும், ஆனால், இவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த போது சிவப்பு ரோஜாக்கள் படத்தில் ஒரு வெயிட்டராக வந்து செல்வார், இதுவே இவரின் முதல் திரைப்பிரவேசம்.
பார்த்திபன்
பார்த்திபனும் பாக்யராஜின் உதவி இயக்குனர், இவர் பாக்யராஜ் இயக்கிய தாவனி கனவுகள் படத்தில் போஸ்ட் மேனாக வந்து செல்வார்.
ரஞ்சித்
கபாலி என்ற இமாலய வெற்றியை கொடுத்த ரஞ்சித் தற்போது இவர் லெவலே வேறு, ஆனால், இவர் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனர் என்பது அனைவரும் அறிந்தது தான், அதே நேரத்தில் இவர் சென்னை-28 படத்தில் ஒரு கிரிக்கெட் ப்ளேயராக வந்தவர் என்பது தற்போது தான் பலருக்கும் தெரிந்திருக்கும்.
CONVERSATION