Georges Polti என்று ஒரு ஃப்ரெஞ்ச் நபர் இருந்தார் (வழக்கப்படி இவரது பெயரை உச்சரிக்க தமிழில் வார்த்தைகள் இல்லை. Georges என்ற ஃப்ரெஞ்ச் பெயரை Zhorzh என்றுதான் உச்சரிக்க வேண்டும். அதாவது, உல்லாசமான மூடில் குரங்கு, அதன் வாயை ‘ஊ’ என்று வைத்துக்கொண்டிருக்குமே அதுபோல் வாயை வைத்துக்கொண்டு, நாக்கை மேலண்ணத்தைத் தொடும் அளவு லைட்டாக மடித்துக்கொண்டு (ஆனால் தொடாமல்) அங்கே இருக்கும் சைக்கிள் கேப்புக்குள் காற்றை பம்ப் செய்தால் ஒருமாதிரியான zzz சத்தம் வரும். உடனேயே இந்தப் பெயரை தம் கட்டி உச்சரிக்க வேண்டும்). அன்னார் ஒரு எழுத்தாளரும் கூட. தேமே என்று எழுதிக்கொண்டிராமல், திடீரென்று ஒரு நாள் அவருக்கு ஒரு எண்ணம் உதித்தது. அவர் பிறந்தது 1867. பத்தொன்பதாம் நூற்றாண்டு. அப்போதே வெளிவந்த நாவல்கள், நாடகங்கள் எல்லாம் அவருக்கு பயங்கர அலுப்பாக இருந்திருந்தன போலும். ‘என்னடா இது.. எந்த புத்தகத்தைப் படித்தாலும், எந்த நாடகத்தைப் பார்த்தாலும் அவற்றில் பல, ஒரே போன்று இருக்கிறதே?’ என்று யோசிக்க ஆரம்பித்த போல்டி (இப்படியே அழைப்போம். zzz என்று ஆரம்பித்து நாக்கு மடங்கிவிட்டால் பிரச்னை), ஒரு முடிவுக்கு வந்தார். அந்த முடிவின்படி க்ரீக், லாடின் மற்றும் ஃப்ரெஞ்ச் நாவல்கள் மற்றும் நாடகங்கள் ஆகியவற்றைப் படிக்க ஆரம்பித்தார். ஒரு சுபயோக சுபதினத்தில் (???!!) முடிந்தவரை படித்துமுடித்துவிட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே (1895) ஒரு புத்தகத்தையும் எழுதி வெளியிட்டார்.
அந்தப் புத்தகம்தான் இன்றுவரை பல திரைக்கதை எழுத்தாளர்களை தெரிந்தோ தெரியாமலோ வாழவைத்துக்கொண்டிருக்கிறது.
அந்தப் புத்தகத்தில் முப்பத்தாறு ஒன் லைன்களை அவர் எழுதி, ஒவ்வொன்றையும் விவரித்து ஒவ்வொரு அத்தியாயம் எழுதியிருந்தார். அவரது கருத்துப்படி, உலகில் எந்த நாவல், எந்த நாடகமாக இருந்தாலும் சரி – இந்த முப்பத்தாறு சிச்சுவேஷன்களில் ஒன்றை வைத்துத்தான் இருக்கும். எந்தக் கொம்பன் எழுதியிருந்தாலும் அப்படியே. ஏனெனில், கணக்கிலடங்காத புத்தகங்களை அவர் படித்து வைத்திருந்தார். அவரிடம் யாராவது இதைப்பற்றி கிண்டல் செய்திருந்தால் புத்தகங்களாலேயே அடித்திருப்பார். எனவே அவரது புத்தகம் புகழடைந்தது. அவர் எழுதிய காலத்தில் சினிமா என்றால் ஏதோ லாலாக்கடை ஜிலேபி என்ற எண்ணமே மக்களிடையே மிகுந்திருந்ததால், நாடகங்கள் மற்றும் நாவல்களையே இந்த முப்பத்தாறு சிச்சுவேஷன்களில் பொருத்திப் பார்த்தனர். ஆனால் அதன்பின் திரைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தபின்னர் பார்த்தால், அவரது கணிப்பு ஏறத்தாழ சரியாகவே இருந்தது. திரைப்படங்களின் ஒன் லைனர்கள் இவரது முப்பத்தாறு சிச்சுவேஷன்களில் கச்சிதமாக வந்து பொருந்தின.
இப்படி யோசித்துப் பாருங்கள். ஆயிரமாயிரம் வருடங்களில் எழுதப்பட்ட எத்தனையோ கதைகளை போல்டி வெறும் முப்பத்தாறே ஒன் லைன்களுக்குள் கொண்டுவந்துவிட்டார். ‘இவ்வளவுதாய்யா இருக்கு. இதுக்குமேல எதையும் கண்டுபுடிக்க முடியாது. இதைவெச்சிதான் எழுதியாகணும்’ என்று தடாலடியாக அவரது புத்தகம் சொல்லியது. அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் அவரது இந்தக் கணக்கைப் பற்றி போல்டியே பெருமிதமாகவும் நம்பிக்கையுடனும் இவ்வாறு எழுதியிருக்கிறார். அவரது புத்தகத்தில் காளிதாஸரைப் பற்றிய மேற்கோள் கூட இருக்கிறது. காளிதாஸரின் ‘சாகுந்தலம்’ என்ற நாடகத்தின் ஒன் லைன் பற்றி இவ்வாறு சொல்கிறார் போல்டி – ‘அம்னீஷியா’. அதாவது, நமது அன்பிற்குரியவர்களை அம்னீஷியாவின் மூலம் இழப்பது. இதுதான் சாகுந்தலத்தின் ஒன்லைன். அதேபோல் காளிதாஸரின் முதல் நாடகமான ‘மாளவிகாக்னிமித்ரம்’ என்பதையும் இப்படி ஒன்லைன் மேற்கோளாக கொடுக்கிறார் போல்டி. அது – ‘இரண்டு மனிதர்களின் விரோதம்’ (அக்னிமித்ரன் என்ற மன்னன், அவனது மனைவியின் பணிப்பெண்ணான மாளவிகா என்ற பெண்ணிடம் காதல் கொள்கிறான். கோபமடையும் அரசி, மாளவிகாவை சிறை வைக்கிறாள். இதன்பின் இறுதியில் மன்னன் மாளவிகாவை மணந்துகொள்கிறான். காரணம், மாளவிகா ராஜபரம்பரையைச் சேர்ந்தவள் என்று தெரிகிறது).
இப்படி எல்லா நாடகங்கள், நாவல்களின் கதைக்கருவையும் கட்டுடைத்தார் போல்டி. இவரது முப்பத்தாறு ஒன் லைன்களைப் படித்தாலே அவற்றில் ஒன்றையோ பலதையோ இணைத்து ஜாலியாக ஒரு திரைக்கதை எழுதிவிடலாம். அவைகளைப் படித்தபின் நீங்களும் இப்படித்தான் சொல்வீர்கள்.
போல்டியின் புத்தகத்தைப் படித்தபின் ஒன்று தோன்றியது. முப்பத்தாறு சிச்சுவேஷன்கள் என்று அவர் எழுதியிருப்பவையெல்லாமே, அந்தந்தப் புத்தகங்கள் மற்றும் நாடகங்கள் ஆகியவற்றின் கரு. ஒன்லைன். கச்சிதமாக அவற்றைப் பிரித்தெடுத்து விவரித்திருக்கிறார் போல்டி. அந்தவகையில் திரைப்பட கதாசிரியர்களின் முன்னோடி இவர்தான். ஆனால் இவர் செய்தது ரிவர்ஸ் ப்ராசஸ்.
எனவே, இப்போது நாம் என்ன செய்யப்போகிறோம் என்றால், போல்டியின் முப்பத்தாறு ஒன்லைன்களையும் ஒவ்வொன்றாக சுருக்கமாகப் பார்க்கப்போகிறோம். கூடவே, போல்டி செய்யாத ஒன்றாக, இவற்றுக்குத் திரைப்பட உதாரணங்களும் பார்க்கப்போகிறோம்
முன்குறிப்பு – Georges Polti 1895ல் எழுதிய Thirty-six dramatic situations என்ற புத்தகத்தை இங்கே க்ளிக் செய்து தரவிறக்கிக்கொள்ளலாம். முடிந்தால் இப்புத்தகத்தை ஒருமுறை புரட்டிப்பாருங்கள். இங்க்லீஷ் மூலத்திலேயே புத்தகம் படிக்கவிரும்பும் நண்பர்களுக்கு இது உதவலாம்.
[divider]
இந்தக் கட்டுரையிலிருந்து போல்டி (Georges Polti) அவரது புத்தகத்தில் விளக்கியிருக்கும் 36 சிச்சுவேஷன்களைப் பார்க்கப் போகிறோம்.
உலகின் அத்தனை நாவல்கள் மற்றும் நாடகங்கள் ஆகியவை, மொத்தம் முப்பத்தாறே சிச்சுவேஷன்களில் அடங்கிவிடக்கூடியவை என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஃப்ரான்ஸில் பிறந்த எழுத்தாளரான போல்டியின் கணிப்பு. அவரது இந்தக் கணிப்பின்படியே ஒரு புத்தகத்தையும் எழுதினார் போல்டி. அந்தப் புத்தகம் 1895ல் பதிப்பிக்கப்பட்டது. ஆனாலும், தற்போதைய திரைப்படங்கள் மற்றும் நாவல்கள் ஆகியவை மிகப்பெரும்பாலும் போல்டியின் முப்பத்தாறு சிச்சுவேஷன்களில் அடங்கிவிடுகின்றன என்பது ஆச்சரியம்.
இனி, போல்டியின் 36 சிச்சுவேஷன்கள்.
Situation 1: Supplication – குறையிரத்தல் (அல்லது) உதவி கேட்டு இறைஞ்சுவது
இந்த சிச்சுவேஷனின்படி, நமது கதைக்குத் தேவையான கதாபாத்திரங்களின் எண்ணிக்கை மூன்று. அவையாவன:
கதாபாத்திரம் 1: வில்லன்.
கதாபாத்திரம் 2: உதவி கேட்பவர்
கதாபாத்திரம் 3: உதவலாமா அல்லது வேண்டாமா என்ற முடிவு எடுப்பவர்.
கதாபாத்திரம் 2: உதவி கேட்பவர்
கதாபாத்திரம் 3: உதவலாமா அல்லது வேண்டாமா என்ற முடிவு எடுப்பவர்.
இந்த மூன்று கதாபாத்திரங்களைப் பார்த்தாலே, இந்த சிச்சுவேஷன் என்னவென்று புரிகிறதல்லவா? அதாவது, கொடியவன் அல்லது கொடியவர்களால் துன்புறுத்தப்படும் கதாபாத்திரம் அல்லது கதாபாத்திரங்கள், உதவி கோருவது. இந்த சிச்சுவேஷன் மொத்தம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.
A. உதவத் தகுதி படைத்த நபர், தனது குடும்பத்தையோ அல்லது தனது விருப்பத்துக்கு உரியவர்களையோ எண்ணி, அவர்களுக்கு வில்லனால் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்று அஞ்சி, வில்லனுக்கு பணிந்துவிடுவது அல்லது பாதிக்கப்பட்ட நபரை எண்ணி கருணை கொண்டு அவர்களுக்கு உதவுவது.
உதாரணம்: ’செந்தூரப்பூவே’ படத்தில் ’தியாகி’ சந்திரசேகர் ராம்கி & நிரோஷாவுக்கு உதவுவது. இது, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவுவதன் உதாரணம். அதேபோல் ‘வைதேகி காத்திருந்தாள்’ விஜயகாந்த். இந்த வேலையை ஒரு காலத்தில் குத்தகைக்கே எடுத்திருந்தார் விஜயகாந்த். அதேசமயம், ‘குருதிப்புனல்’ படத்தில் கமலின் கதாபாத்திரம், வில்லனால் தனது குடும்பத்துக்கு பிரச்னை நேர்ந்துவிடுமோ என்று அஞ்சி, வில்லனுக்குப் பணிந்துவிடுகிறது. இது ஒரு நேரடி உதாரணம் அல்ல. காரணம் இங்கே பாதிக்கப்பட்ட நபர் யாரிடமாவது உதவி கேட்பது – அந்த உதவி செய்யக்கூடிய நபர் வில்லனுக்குப் பயந்து உதவியை மறுப்பது – என்பது இல்லை. இதில் ஒரு பகுதியே (வில்லனுக்குப் பணிவது) குருதிப்புனலில் கமலால் காட்டப்படுகிறது. ஆனால், இந்த விஷயத்தை பல தமிழ்ப்படங்களில் காண முடியும்.
நிஜவாழ்விலும் பண்டைய காலத்தில் இந்தியாவிலும் உலகிலும் நிகழ்ந்த போர்க்களங்களில் இந்த சிச்சுவேஷனைக் காணமுடியும். இரண்டாம் உலகப்போர் இப்படித்தான் நிகழ்ந்தது. போலாண்ட் மீதான ஜெர்மனியின் படையெடுப்பை ஃப்ரான்ஸும் இங்க்லாண்டும் எதிர்த்துப் பிரகடனம் செய்ததால்தான் இரண்டாம் உலகப்போர் உருவானது. மொகலாய ஆட்சியில் எத்தனை ராஜபுத்திர மாகாணங்களின் மீது மொகலாயர்கள் படையெடுத்தனர் என்பதை எண்ணிப் பாருங்கள். அப்போதெல்லாம் பிற மாகாணங்கள் அவர்களின் உதவிக்கு வந்ததுண்டு. அல்லது மொகலாயர்களைக் கண்டு பயந்து உதவாமல் பணிந்ததும் உண்டு.
இந்த வகைக்குக்கீழ் மொத்தம் மூன்று பிரிவுகள் உண்டு.
A1. எதிரியிடமிருந்து தப்பியோடி வந்த நபரோ அல்லது நபர்களோ, தக்க இடத்திடம் தங்களைக் காத்துக்கொள்ள உதவி கேட்பது.
உதாரணம்: ராமாயணத்தில் விபீஷணன் கதை தெரியுமல்லவா? அண்ணன் ராவணனிடம் தப்பித்து, ராமனிடம் வந்து தஞ்சமடைந்தது. இதே கதையை வைத்து தமிழில் பல படங்களில் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
A2. புனிதமான காரியம் ஒன்றை நிறைவேற்றுவதற்காக உதவியை நாடுதல். இந்தப் புனிதமான காரியம், தடை செய்யப்பட்ட (forbidden) ஒன்றாக இருக்கும்.
உதாரணம்: ஊரால் தடைசெய்யப்பட்டிருக்கும் கோயில் ஒன்றைத் திறக்கச்சொல்லி பக்கத்து ஊரின் நாட்டாமையிடம் உதவி கேட்பது.
A3. இறப்பதற்கான ஒரு இடத்தை வேண்டி உதவி கேட்பது. அந்த இடத்தில்தான் அமைதியாக உயிரை விட முடியும் என்பதால்.
உதாரணம்: மஹாபாரதத்தின் பீஷ்மர், அர்ஜுனனிடம் அம்புப்படுக்கை கேட்டது. அந்த அம்புப்படுக்கையிலேயே அமைதியாக உயிரை விட்டது.
முதல் பகுதியில் மூன்று பிரிவுகளைப் பார்த்தோம். இப்போது இரண்டாவது பகுதி.
B. வில்லனின் மனம் திடீரென மாற்றம் அடைவது. இதனால் பாதிக்கப்பட்டவரை வில்லன் விட்டுவிடலாம் அல்லது கொல்லவும் செய்யலாம். இதில் வில்லனும் உதவி செய்பவரும் ஒரே நபர்தான்.
இந்த வகை நான்கு வகைப்படும்.
B1. நடுக்கடலில் கப்பல் மூழ்கி, அதிலிருந்து உயிர்பிழைத்தவர்கள் காப்பாற்றப்படுதல் (இதில் வில்லன் என்பது கடல்).
B2. தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தை அவமானப்படுத்தி, அதனால் அவர்களால் ஒதுக்கிவைக்கப்பட்டபின் அவர்களிடமே மன்னிப்பு கேட்பது
B3. செய்த தவறுக்கு மனம் வருந்தி பிராயச்சித்தம் செய்தல். கருணை மனு, பாவமன்னிப்பு இத்யாதி.
B4. ஒரு பிணத்தையோ அல்லது ஒரு புனிதமான பொருளையோ அல்லது ஒரு நினைவுச்சின்னத்தையோ பெற விரும்புவது.
(இந்தப் பகுதியில் உள்ள நான்கு வகைகளுக்கு உதாரணம் தேவையில்லை என்று நினைக்கிறேன். காரணம் அவை நேரடியாகவே இருக்கின்றன).
முதலிரண்டு பகுதிகளைப் பார்த்தபின், இப்போது மூன்றாவது பகுதியைப் பார்ப்போம்.
C. வில்லன், பாதிக்கப்பட்டவர் மற்றும் உதவி செய்பவர் ஆகியவர்களோடு நான்காவது கதாபாத்திரம் ஒன்று – பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் உதவி செய்யும் தகுதி படைத்தவர்களிடம் பேசி உதவியைப் பெற்றுத் தர முயல்வது – என்பதே இந்த மூன்றாவது பகுதி. கிட்டத்தட்ட வக்கீல்களைப் போன்ற கதாபாத்திரம். ஆனால் வக்கீல்களைப் போல் தொழிலே கண்ணாக இல்லாமல், இரக்கத்தால் நிரம்பிய இதயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் பேசுவது.
இந்த மூன்றாவது பிரிவு, வழக்கப்படி மூன்று வகைப்படுகிறது.
C1. பாதிக்கப்பட்டவர்களின் சார்பில், அவர்களது சுற்றத்தினருக்காக (அல்லது அவர்களது சமுதாயத்துக்காக) சென்று யாராவது பேசி உதவியைப் பெற முயற்சித்தல்.
C2. ஒரு உறவினரிடம் இன்னொரு உறவினரின் சார்பில் யாராவது சென்று உதவி கேட்பது
C3. தனது தாயை வஞ்சித்த கள்ளத் தகப்பனிடம் அவனது மகன் சென்று நியாயம் கேட்பது (அல்லது தாயின் காதலன் அல்லது முன்னாள் கணவனிடம் யாரேனும் சென்று பேசி சேர்த்துவைக்க முயலுவது அல்லது இந்த ரீதியிலான கதைகள்). இதற்கு உதாரணம் மிஸ்டர் பாரத், அமைதிப்படை போன்ற படங்கள்.
இவைதான் போல்டியின் முதல் சிச்சுவேஷனான ‘உதவி கேட்டு இறைஞ்சுவது’ என்பதில் உள்ள மூன்று பிரிவுகள் மற்றும் அவற்றின் உட்பிரிவுகள்.
கறுப்பில் bold செய்யப்பட்டுள்ள A, B & C ஆகியவையே மூன்று பிரிவுகள். அவற்றின்கீழ் A1, A2, A3 மற்றும் B1, B2, B3, B4 மற்றும் C1, C2 & C3 ஆகியவை இந்த மூன்று பிரிவுகளின் உட்பிரிவுகள் என்பது படிக்கும்போதே தெரிந்திருக்கும்.
போல்டி புத்தகம் எழுதிய காலமான 1895ல் இந்த முதலாவது சிச்சுவேஷனை இலக்கிய உலகம் மறந்துவிட்டது என்று அவர் குறிப்பிடுகிறார். பண்டைய கால நாடகங்கள் (சோஃபோக்ளிஸின் பல நாடகங்களை உதாரணமாக அளிக்கிறார் போல்டி) பலவற்றில் இந்த சிச்சுவேஷன் எடுத்தாளப்பட்டிருக்கிறது என்று சொல்லிவிட்டு, தற்காலத்தில் இதனை இலக்கியம் மறந்தது ஒரு துன்பியல் சம்பவம் என்ற அங்கலாய்ப்போடு இந்த முதலாம் சிச்சுவேஷனைப் பற்றிய அத்தியாயத்தை முடிக்கிறார்.
Situation 2: Deliverance – விடுவித்தல் (அல்லது) காப்பாற்றுதல்
இந்த இரண்டாம் சிச்சுவேஷனுக்கும் நமக்குத் தேவையானவை மூன்று கதாபாத்திரங்கள்.
கதாபாத்திரம் 1: வில்லன்.
கதாபாத்திரம் 2: பாதிக்கப்பட்ட அப்பாவி. வில்லனால் மிரட்டப்படுபவர்.
கதாபாத்திரம் 3: அப்பாவியை வில்லனிடமிருந்து காப்பாற்றும் நபர்
இந்த சிச்சுவேஷன், முதலாவது சிச்சுவேஷனின் நேர் எதிர். அதாவது, முதல் சிச்சுவேஷனில் பாதிக்கப்பட்ட நபர் யாரிடமாவது இறைஞ்சி, அந்த நபர் இந்த ஆளுக்கு உதவலாமா அல்லது வில்லனுக்குப் பயந்து ஓடிவிடலாமா என்று யோசிப்பதைப் பார்த்தோம். ஆனால் இதில் யாராவது பாதிக்கப்பட்டவுடன் தானாகவே ஹீரோ வந்து குதித்து, வில்லனை அடி பின்னியெடுத்து அப்பாவியை விடுவிப்பது பற்றி சொல்லப்படுகிறது.
இந்த சிச்சுவேஷனுக்கு உதாரணம் தேவையா? பழைய படங்களில் எம்.ஜி.ஆர் இந்த சிச்சுவேஷனில் பின்னிப் பெடலெடுத்ததை நாம் எத்தனை முறை பார்த்திருக்கிறோம்? அதன்பின் ரஜினி இதே ரோலை தனது டெம்ப்ளேட்டாகவே ஆக்கிக்கொண்டவர். குறிப்பாக, எங்க வீட்டுப் பிள்ளை படம் என்னால் மறக்கவே முடியாது. அதில்தான் இந்த டெம்ப்ளேட் அட்டகாசமாக வெளிப்பட்டிருக்கும். ‘எங்களை காப்பாத்த யாருமே இல்லையா?’ என்று பண்டரிபாய் வசனம் பேசும்போது காட்சி கட் ஆகி, ‘நான் இருக்கேன். பயப்படாதீங்க’ என்று ஹீரோ எம்.ஜி.ஆர் வீராவேசமாக சொல்லிவிட்டு சண்டையிடும் காட்சி வரும். அதைப் பார்ப்பதற்கே ஜாலியாக இருக்கும். இந்த ரீதியிலான தமிழ்ப்படங்களில் அதுதான் வெளிப்படையான டெம்ப்ளேட்டுடன் வந்த படம் என்று நினைக்கிறேன். அதே படத்தில் நம்பியாரை சவுக்கால் விளாறும் எம்.ஜி.ஆரை மறக்க முடியுமா?
இங்கே ஒரு குறிப்பு – இந்தப் படத்தில்தான் ‘மறுபடியும் மொதல்லருந்தா?’ என்ற டயலாக் முதன்முதலில் வருகிறது. எம்.ஜி. ஆர் பேய்த்தீனி தின்னும் காட்சியில் பயந்தாங்கொள்ளி எம்.ஜி.ஆர் வந்து இட்லி ஆர்டர் செய்யும்போது சர்வர் சொல்லும் டயலாக் இது.
இந்த சிச்சுவேஷன் மொத்தம் இரண்டு வகைப்படும்.
A. தண்டிக்கப்பட்ட அப்பாவியைக் காப்பாற்ற யாராவது தோன்றுதல்
தண்டனை கொடுத்தல் என்பது இங்கே சட்டப்படி தண்டனை கொடுத்தல் (மட்டும்) அல்ல. வில்லனால் எங்காவது ஒரு வீட்டில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு பெண்ணை ஹீரோ வந்து தானாகவே காப்பாற்றுவது இந்தப் பிரிவின் கீழ் வருகிறது. இதேபோல் சிறையிலிருக்கும் அப்பாவியை ஒரு வக்கீல் தானாகவே முன்வந்து வாதாடி விடுவிப்பது (To kill a mockingbird), எதிரி நாட்டு சிறையில் இருக்கும் ஒற்றனைக் காப்பாற்றுவது (இணைந்த கைகள்) போன்ற ஒன்லைன்களை இந்த சிச்சுவேஷனிலிருந்து டெவலப் செய்யமுடியும்.
B (1) – பதவியிழந்த தந்தையையோ தாயையோ மறுபடியும் அதே பதவியில் அவர்களின் பிள்ளைகள் அமரவைப்பது
B(2) – முன்னர் செய்த உதவிக்குக் கைமாறாகவோ அல்லது பணத்துக்காகவோ நண்பர்களோ அல்லது அந்நியர்களோ ஒரு கதாபாத்திரத்தைக் காப்பாற்றுவது
Chivalry என்ற ஒரு பதம் உண்டு. பண்டையகாலத்தில் வாந்த வீரர்களுக்கு இது ஒரு இன்றியமையாத பண்பு. வீரம், பணிவு, பரிவு, கருணை, கௌரவம் போன்ற பண்புகளின் கலவையே chivalry. இந்தப் பதத்தையே இந்த இரண்டாவது சிச்சுவேஷனான Deliverance என்பதற்கு உதாரணமாக போல்டி தருகிறார். அதாவது, கதாநாயகன் இப்படிப்பட்டவனாக இருப்பான். அவனது பண்புகளால் தானாகவே சென்று ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பான்.
[divider]
இரண்டு சிச்சுவேஷன்கள் இப்படியாக முடிகின்றன. பாக்கி இருப்பது இன்னும் 34. அவற்றை இந்த ரீதியில் பார்த்தால் வேறு எதுவுமே எழுத இயலாது என்பதால், படுவேகமாக, சுருக்கமாக மீதம் இருப்பவைகளைப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். அடுத்த கட்டுரையில் சந்திப்போம்.
இந்த சிச்சுவேஷன்களுக்குத் தகுந்த உதாரணங்கள் எதாவது இதைப்படிக்கும் நண்பர்களுக்குத் தோன்றினால் கமெண்ட்களில் அவற்றை எழுதலாம். படிப்பவர்களுக்கு இந்த உதாரணங்கள் உதவும்.
Situation 3: Crime pursued by Vengeance – குற்றமும் பழிதீர்த்தலும்
இந்த சிச்சுவேஷனுக்குத் தேவையான கதாபாத்திரங்கள் இரண்டு.
கதாபாத்திரம் 1: குற்றம் புரிந்தவன் (அல்லது) கும்பல்
கதாபாத்திரம் 2: பழிதீர்க்கும் நபர் (அல்லது) குழு
கதாபாத்திரம் 2: பழிதீர்க்கும் நபர் (அல்லது) குழு
இந்த சிச்சுவேஷனுமே பல எழுபதுகள் மற்றும் எண்பதுகளின் தமிழ்ப்படங்களின் டெம்ப்ளேட் என்று சொல்லமுடியும். ஒரு குற்றம் – அதனைத் தொடர்ந்து, அந்தக் குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் கொடியவனைப் பழிதீர்த்தல் என்ற இந்த சிச்சுவேஷன் மொத்தம் மூன்று வகைப்படும். (இதில் முதலிரண்டு வகைகளுக்கு போல்டியே பெயர் வைக்கவில்லை).
1.
A. பெற்றோர்களில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ அல்லது மூதாதையர்களையோ கொன்றதைப் பழிவாங்குதல்
B. பிள்ளைகள் அல்லது வழித்தோன்றல்கள் கொல்லப்பட்டதைப் பழிதீர்த்தல்
C. அவமானப்படுத்தப்பட்ட பிள்ளை: அதற்காகப் பழிவாங்குவது
D. மனைவி அல்லது கணவன் கொல்லப்பட்டதற்காக கணவனோ அல்லது மனைவியோ பழிதீர்த்தல்
E. மனைவி அவமானப்படுத்தப்பட்டதையோ அல்லது அவளை யாரேனும் அவமானப்படுத்த முயன்றதையோ பழிவாங்குதல்
F. காதலி கொல்லப்பட்டதைப் பழிதீர்த்தல்
G. படுகாயமடைந்த (அல்லது) கொல்லப்பட்ட நண்பனுக்காகப் பழிவாங்குதல்
H. மானபங்கப்படுத்தப்பட்ட சகோதரிக்காக பழிதீர்த்தல்

2.
A. காயப்படுத்தப்பட்டதையோ அல்லது சரிசெய்யவே முடியாத கொடூரமான சிதைத்தலையோ எதிர்த்துப் பழிவாங்குவது
B. உரியவர் இல்லாதபோது அவருக்குப் பிடித்தமான பொருட்களையோ அல்லது ஆட்களையோ கடத்துவதற்குப் பழிதீர்த்தல்
C. கொலைமுயற்சிக்காகப் பழிவாங்குதல்
D. போலியான குற்றச்சாட்டை சுமத்தியவர்களைப் பழிதீர்த்தல்
E. கற்பழிப்புக்காகப் பழிவாங்குவது
F. தன்னிடமிருந்து திருடப்பட்ட அல்லது பறிக்கப்பட்டவைகளுக்காகப் பழிதீர்ப்பது
G. துரோகம் செய்ததற்காக, அதை செய்தவரின் பாலினத்தைச் சேர்ந்தவர்களை ஒரே நபர் கொல்லுவது

3. கிரிமினல்களை, போலீஸோ அல்லது துப்பறிவாளர்களோ துரத்துவது
Situation 4: Vengeance taken for kindred upon kindred – உறவுகளின்மீதான பழிதீர்த்தல்
இந்த முப்பத்தாறு சிச்சுவேஷன்களில், சிலமுறை இரண்டு சிச்சுவேஷன்களை ஒன்றுசேர்த்து ஒரு புதிய சிச்சுவேஷனை போல்டி உருவாக்கியது உண்டு. இந்த நான்காவது சிச்சுவேஷன் அப்படிப்பட்டது. தனது பட்டியலின் 27வது சிச்சுவேஷனான ‘உறவினரின் அவமானத்தைத் தெரிந்துகொள்ளல்’ என்பதை மூன்றாவது சிச்சுவேஷனான பழிதீர்த்தலுடன் சேர்த்து உருவாக்கியதே இந்த நான்காவது சிச்சுவேஷன். இந்த சிச்சுவேஷனின்படி, குற்றம் புரிந்த உறவினரை இன்னொரு உறவு பழிவாங்குவார். உறவினர்களுக்கிடையான பிரச்னைகளைப் பற்றிய சிச்சுவேஷன் இது.
இந்த சிச்சுவேஷனின் விசேடம் என்னவென்றால், இதிலுள்ள பல சாத்தியக்கூறுகள்தான். அதாவது, குற்றம் புரிந்தவரைப் பழிவாங்கும்வரையில் அவருக்கும் தனக்கும் உள்ள உறவுமுறையே தெரியாமல் இருக்கக்கூடிய சாத்தியம் உண்டு. கூடவே, இறக்கும் தருவாயில் இருப்பவரின் கடைசி ஆசையாகக் கூட இந்தப் பழிவாங்கல் இருக்கலாம். போலவே இறந்தவரின் நினைவுகள் மனதை ஆட்டிப்படைப்பதால் இந்தப் பழிவாங்கல் நடக்கலாம். அல்லது முறையாக சட்டப்படிக்கூட இந்தப் பழிவாங்கல் நிறைவேறலாம் (பழிவாங்கும் நபர் போலீஸாகவோ சட்ட அதிகாரியாகவோ இருந்தால்). அதேபோல் உறவினரையோ அல்லது உறவினர்களையோ அல்லது ஊர் மக்களையோ காக்கும் முயற்சியாகவோ இந்தப் பழிவாங்கல் நடக்கலாம். உறவினரைப் பழிவாங்குகையில் அவர் நிரபராதி என்று தெரியவரலாம் (அதற்குள் சம்மந்தப்பட்டிருப்பவர் இறந்திருப்பார்). இதனால் பழிவாங்கியவர் ஒரு கிரிமினலாக மாறலாம். போலவே, குற்றம் புரிந்த நபரைப் பழிவாங்குமுன்னர், அந்த நபர் உயிரையே வைத்திருப்பவர்கள் கூட தண்டிக்கப்படலாம். இறுதியாக, மனிதர்களாகவே இல்லாமல் அவர்களின் பொருட்களான வீடு, தோட்டம் போன்றவை கூட அழிக்கப்படலாம்.
இப்போது, இந்த சிச்சுவேஷனின் நான்கு வகைகள்.
1.
A. தந்தையைக் கொன்ற தாயைப் பழிவாங்குதல்
B. தாயைக் கொன்ற தந்தையைப் பழிவாங்குதல்
B. தாயைக் கொன்ற தந்தையைப் பழிவாங்குதல்
2. சகோதரனைக் கொன்ற மகனை, அவனது தந்தை பழிவாங்குவது
3. தந்தையைக் கொன்ற கணவனை, மனைவி பழிவாங்குவது
4. கணவனைக் கொன்ற தந்தையைப் பழிவாங்கும் மனைவி
இவையே இந்த சிச்சுவேஷனின் பிரதான பிரிவுகள். இதைத்தவிரவும் இன்னும் பல உட்பிரிவுகளை சுட்டிக்காட்டும் போல்டி, அவற்றையும் மிகச்சுருக்கமாக எந்த உதாரணங்களும் இல்லாமல் விளக்குகிறார். ஆனால் அவைகளை இங்கே பட்டியலிட்டால் குழப்பமே மிஞ்சக்கூடும் என்பதால், எந்த உறவினர்கள் மீதும் பிற உறவினர்கள், இறந்தவர்களுக்காக அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்காக இந்தப் பழிவாங்கும் முயற்சியை நடத்தலாம் என்பது மட்டும் கவனத்தில் வைப்போம்.
Situation 5: Pursuit – பின்தொடர்தல்(அல்லது) துரத்தப்படுதல்
இந்த சிச்சுவேஷன், துரத்தப்படும் ஹீரோ அல்லது ஹீரோயினை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. இதன்படி அப்படி தப்பியோடும் நபர் செய்த குற்றம் மன்னிக்கப்படலாம். அந்த நபரே ஒரு நிரபராதியாகக்கூட இருக்கலாம். மிகச்சிறிய குற்றமாகவும் அது இருக்கலாம். ஆனால், நாம் நினைவுகொள்ளக்கூடிய விஷயம் என்னவென்றால், அப்படி ஓடும் நபரை ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்பதே. பெரும்பாலும் அப்படித் தப்பியோடும் நபர் தனிமையாகவே உணர்வார். அவரது வாழ்வில் இதன்பின் நடக்கும் சம்பவங்களையே இந்த சிச்சுவேஷன் மையமாக வைக்கிறது. குற்றத்தைப் பற்றி நாம் இங்கு பார்க்கப்போவதில்லை. மாறாக, அந்த நபரின் பயணம்தான் முக்கியம்.
இந்த சிச்சுவேஷன் நான்கு வகைப்படும்.
1. சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி ஓடும் நபர்கள், அவர்கள் செய்த அரசியல் குற்றங்கள் மற்றும் கொள்ளை, திருட்டு ஆகியவற்றுக்காக துரத்தப்படுதல்.
2. காதல், கட்டாயத் திருமணம், ஒருதலைக் காதல் போன்ற விஷயங்களில் இருந்து தப்பி ஓடுதல்
3. ஒரு மாபெரும் சக்திக்கு எதிராகப் போரிடும் ஹீரோ
4. ஒரு சைக்யாட்ரிஸ்ட்டிடம் மாட்டிக்கொண்டு அவதிப்படும் போலி பைத்தியம் (அல்லது) பைத்தியமாக நடிக்கும் மனிதன்
Situation 6: Disaster – கொடுந்துன்பம்
மனித மனதுக்கு பெரும் துன்பம் தரக்கூடிய விஷயங்கள் இந்த சிச்சுவேஷனின் கீழ் வருகின்றன. நான்கு வகைகளில் இந்த சிச்சுவேஷனை விலக்குகிறார் போல்டி.
1.
A. தோல்வியடைதல் – இது, போரில் அடையும் தோல்வியாக இருக்கலாம். அல்லது இரண்டு மனிதர்களுக்கிடையே நடக்கக்கூடிய போட்டியில் தோல்வியடையும் நல்ல மனமாக இருக்கலாம். எந்த நிலையானாலும் சரி, தோல்வி அடைந்து, அதனால் நேரக்கூடிய துன்பமே இந்த முதல் வகை.
B. தாய்நாடு சிதைக்கப்படுவது
C. மனித சமுதாயத்தின் வீழ்ச்சி
D. இயற்கைப் பேரழிவு
2. ஒரு சர்வாதிகாரி வீழ்த்தப்படுதல்
3.
A. செய்நன்றி மறத்தல்
B. அநியாயமான, நேர்மையற்ற தண்டனை அல்லது விரோதத்தால் துன்பமடைதல்
C. அக்கிரமத்தால் பாதிக்கப்பட்டு வருந்துதல்
4.
A. காதலன் அல்லது கணவனால் கைவிடப்படுதல்
B. பெற்றோரால் தொலைக்கப்பட்ட குழந்தைகளின் துன்பம்
Situation 7: Falling prey to cruelty or misfortune – கொடூரம் அல்லது துரதிருஷ்டத்தால் பாதிக்கப்படுவது
Pessimism என்று சொல்லக்கூடிய எதிலுமே நம்பிக்கையற்ற குணத்தின் முழு வெளிப்பாடாக இந்த சிச்சுவேஷனைப் பற்றிச் சொல்கிறார் போல்டி. வழக்கப்படி இதுவும் நான்கு வகைப்படுகிறது.
1. ஒரு அப்பாவி, சூழ்ச்சியில் மாட்டிக்கொள்வது
2. தன்னைக் காப்பவர்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கும் நம்பிக்கையான சிலரே ஒரு அப்பாவியை ஏமாற்றுதல்
3.
A. செல்வாக்கும் மரியாதையும் மிக்கவர்கள் திடீரென அத்தனையும் பறிக்கப்பட்டு மிகுந்த துயரமிக்கவர்களாக மாறுதல்
B. எப்போதும் அன்பிற்குகந்தவர்களாக கருதப்படுபவர்கள் திடீரென மறக்கப்படுதல்
4. துர்ப்பாக்கியசாலிகள், அவர்களிடம் இருக்கும் ஒரே நம்பிக்கையையும் பறிகொடுத்தல்
Situation 8: Revolt – கிளர்ச்சி (அல்லது) புரட்சி
புரட்சி அல்லது கிளர்ச்சி என்பது எப்போதும் மக்களின் விருப்பத்துக்குகந்தவைகளாகவே இருக்கின்றன. அடிமைப்பட்டவர்கள் கிளர்ந்து எழும்போது எப்போதுமே அது பெரும் சுவாரஸ்யத்தையும் மகிழ்ச்சியையுமே உண்டுசெய்கிறது அல்லவா? இது இரண்டுவகைப்படுகிறது.
1.
A. ஒரு தனிமனிதனின் சதித்திட்டம்
B. ஒரு கும்பலின் சதித்திட்டம்
2.
A. ஒரு தனி மனிதனின் புரட்சியினால் பிறரும் உந்தப்பட்டு அவனுடன் சேர்தல்
B. பலரும் சேர்ந்து புரட்சி செய்தல்
பழங்காலத்திய நாடகங்களும் கதைகளும், ‘அடிமைப்படுத்தப்பட்ட மனிதன், தனது பாதி ஆன்மாவை இழக்கிறான்’ என்று சொல்லியுள்ளதை நினைவுகூரும் போல்டி, அவரது காலத்தின் புத்தகங்களில் விவாதிக்கப்பட்டுள்ள புரட்சிகளின் விவரணைகளுடன் இந்த அத்தியாயத்தை முடிக்கிறார்.
Situation 9: A daring enterprise – துணிச்சலான செய்கை
இந்த சிச்சுவேஷனுக்குத் தேவையான கதாபாத்திரங்கள் மூன்று.
கதாபாத்திரம் 1: துணிவு நிரம்பிய ஹீரோ
கதாபாத்திரம் 2: இந்த ஹீரோ துணிச்சலுடன் அடைய நினைக்கும் பொருள்
கதாபாத்திரம் 3: வில்லன்
கதாபாத்திரம் 2: இந்த ஹீரோ துணிச்சலுடன் அடைய நினைக்கும் பொருள்
கதாபாத்திரம் 3: வில்லன்
ஹீரோ ஒரு துணிச்சலானவன். அவன் அடைய நினைக்கும் பொருளை எப்பாடுபட்டாவது துணிகரச்செயல் புரிந்து அடைய நினைப்பவன். ஆனால் இடையில் நிற்பது வில்லன். அப்போது என்ன ஆகும்?
1. போர் புரிய ஆயத்தம் செய்தல்
2.
A. போர்
B. கைகலப்பு (அல்லது) சிறிய அளவிலான சண்டை
3.
A. யாருக்கேனும் பிடித்த ஒரு நபரையோ அல்லது பொருளையோ கவர்ந்து சென்றுவிடுவது
B. கவர்ந்து செல்லப்பட்ட பொருளை மீட்டுக் கொண்டுவருதல்
4.
A. சாகஸமிக்க பயணங்கள்
B. ஹீரோ விரும்பும் பெண்ணை அடைவதற்காக மேற்கொள்ளும் சாகஸப் பயணம்
யோசித்துப் பாருங்கள். சிந்துபாதின் கதைகள், ஆயிரத்தோரு அராபியக் கதைகள், ரஷ்ய நாடோடிக் கதைகள் போன்ற பலவற்றில் இப்படிப்பட்ட சாகஸப் பயணங்கள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களை மறக்க முடியுமா? இப்படிப்பட்ட கதைகளில் இயல்பாகவே நமது சுவாரஸ்யம் அதிகரிக்கிறது. ஆனால், எனக்குத் தெரிந்து தமிழில் இப்படிப்பட்ட கதைகள் அரிது. தற்காலத்தில், ஆயிரத்தில் ஒருவன் படத்தை சொல்லலாம்.
Situation 10: Abduction – கடத்திச் செல்லுதல்
கடத்துதல் என்ற இந்த சிச்சுவேஷன் பல தமிழ்ப்படங்களில் கையாளப்பட்டிருக்கிறது. ஆங்கிலப்படங்களிலும் இது மிகவும் சுலபமான கரு. இதில் உள்ள பல்வேறு வகைகளை இதோ போல்டி விளக்குகிறார்.
1. விருப்பமில்லாத பெண்ணைக் கடத்திச் செல்லுதல்
2. விருப்பமுடைய பெண்ணை கடத்திச் செல்லுதல்
3.
2. விருப்பமுடைய பெண்ணை கடத்திச் செல்லுதல்
3.
A. கடத்திச் செல்லப்பட்ட பெண்ணை, கடத்தியவர்களைக் கொல்லாமல் திரும்ப அடைதல்
B. கடத்திலவரைக் கொன்றுவிட்டு, கடத்திச்செல்லப்பட்ட பெண்ணை அடைதல்
B. கடத்திலவரைக் கொன்றுவிட்டு, கடத்திச்செல்லப்பட்ட பெண்ணை அடைதல்
4.
A. கடத்தப்பட்ட நண்பனையோ தோழியையோ காப்பாற்றுதல்
B. கடத்தப்பட்ட குழந்தையை விடுவித்தல்
C. வாழ்வின் குறிக்கோள் அறீயாமல் சீரழிந்துகொண்டிருக்கும் ஆன்மாவை சரியான பாதியில் மீட்டு வருதல் (புத்தரின் கதை. ஆன்மீக மஹான்களின் கதை).
B. கடத்தப்பட்ட குழந்தையை விடுவித்தல்
C. வாழ்வின் குறிக்கோள் அறீயாமல் சீரழிந்துகொண்டிருக்கும் ஆன்மாவை சரியான பாதியில் மீட்டு வருதல் (புத்தரின் கதை. ஆன்மீக மஹான்களின் கதை).
இத்துடன் முதல் பத்து சிச்சுவேஷன்கள் முடிகின்றன.
இந்தக் கட்டுரைத் தொடரை எழுத ஆரம்பிக்கும்போது ஒரு விஷயத்தை நான் தெளிவாக எழுதவில்லை. அதாவது, போல்டி அவரது புத்தகத்தை எழுதியபோது மொத்தமே 36 கதைகள் தான் இருக்கின்றன என்று சொல்லவில்லை. அவர் சொல்லியது என்னவென்றால், எந்தக் கதையாக இருந்தாலும் (நாடகங்கள் மற்றும் கவிதைகளில் வரும் கதையையும் சேர்த்துதான் கதை என்று சொல்கிறேன்), அவைகளை மொத்தம் முப்பத்தாறு சிச்சுவேஷன்களில் அடக்கிவிடலாம் என்று சொல்லியிருந்தார். ஒரு குறிப்பிட்ட நாவலிலோ அல்லது நாடகத்திலோ இந்த சிச்சுவேஷன்கள் (அதாவது சூழ்நிலைகள்) பலவும் இடம்பெறலாம். மொத்தம் ஒரே ஒரு சிச்சுவேஷன்தான் இடம்பெறவேண்டும் என்பது அவசியமில்லை. அப்படி இடம்பெறும் சிச்சுவேஷன்களை ஆராய்ந்துதான் அவரது புத்தகத்தையே போல்டி எழுதியிருந்தார். எனவே, மேற்கொண்டு படிக்கும் நண்பர்கள் இந்த விஷயத்தை மனதில் வைத்துக்கொண்டு படிக்க வேண்டுகிறேன்.
[divider]
Situation 11: The Enigma – புதிர்
இந்த சிச்சுவேஷனுக்குத் தேவையான விஷயங்கள் மூன்று.
கதாபாத்திரம் 1: புதிரை உருவாக்குபவர்
கதாபாத்திரம் 2: புதிரைத் தீர்த்து வைப்பவர்
புதிர்.
கதாபாத்திரம் 2: புதிரைத் தீர்த்து வைப்பவர்
புதிர்.
எத்தனை நாவல்களில் ஏதோ ஒரு மர்மத்தைத் தீர்ப்பதற்காக போராடும் கதாபாத்திரங்களை சந்தித்திருக்கிறோம்? ஒரு கொலை – அதனைத் தொடர்ந்து துப்பறிதல், அல்லது ஆள் கடத்தல் – அதனைத் தொடர்ந்து கடத்தியவர்களைக் கண்டுபிடித்தல் போன்றவை இந்த சிச்சுவேஷனில் அடக்கம். ஏதேனும் ஒரு புதிரை கதையின் பிரதான கதாபாத்திரங்கள் தேடிச்சென்று அதன் முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்ப்பதே இந்த சிச்சுவேஷன்.
இந்த சிச்சுவேஷன் மூன்று வகைப்படுகிறது.
1. மரணத்தை எதிர்நோக்கியுள்ள ஒரு நபரையோ அல்லது சில நபர்களையோ கண்டுபிடித்து விடுவித்தல் (இந்த சூழ்நிலையில் சில சமயம் நபர்கள் அல்லாமல் ஏதேனும் ஒரு பொருளைக் கூட தேடும் நிலை வரலாம். அந்த சூழ்நிலையில் மரணம் என்பது இருக்காது. கதாநாயகனோ அல்லது கதாநாயகியோ ஏதேனும் ஒரு பொருளைத் தேடும் சிச்சுவேஷனே இது).
2.
A. மரணத்தில் முடியக்கூடிய ஒரு புதிரை கண்டுபிடித்தல். புதிரை அவிழ்த்தால் மரணம் தவிர்க்கப்படும் (புதிரைக் கண்டுபிடிக்கும் நாயகனின் மரணமாகக் கூட அது இருக்கலாம்).
B. மரணத்தில் முடியக்கூடிய ஒரு புதிரைக் கண்டுபிடித்தல். ஆனால் இந்த சிச்சுவேஷனில், புதிரை சொல்வதே அந்தக் கதையின் கதாநாயகிதான். கதாநாயகன் அந்தப் புதிரை அவிழ்க்காவிடில் அவனது மரணம் நிகழும் (ராஜா ராணி கதைகளில், யாராவது ஒரு இளவரசி எதாவது ஒரு புதிரை சொல்வாள். அதனைக் கண்டுபிடிக்க வருபவர்கள் தவறாக விடை சொல்லி சிரச்சேதம் செய்யப்படுவார்கள். இறுதியில் கதாநாயகன் வந்து சரியாகக் கண்டுபிடித்து இளவரசியை மணந்துகொள்வான்).

இதில் இன்னொரு மாறுபாட்டை, வில்லனை அறிமுகப்படுத்துவதன்மூலம் நுழைக்கலாம். புதிரை அவிழ்க்கும் பாதையில் வில்லனின் இடையூறுகள். பழைய தமிழ்ப்படங்களான ‘குலேபகாவலி’ போன்றவை இந்த ரீதியைச் சேர்ந்தவையே.
சில சமயங்களில், கதாநாயகியின் புதிரை ஏற்கும் கதாநாயகன், பதிலுக்கு தன்னுடைய பெயரை அவள் கண்டுபிடிக்கவேண்டும் என்று சொல்வதுண்டு. இதெல்லாம் பழங்கால ஐரோப்பிய நாடகங்கள் மற்றும் கதைகள் என்பதை மறக்கவேண்டாம். போல்டி கொடுக்கும் உதாரணங்கள் பலவும் சோஃபோக்ளிஸ் எழுதிய நாடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இதுவே மூன்றாவது பிரிவு.
3.
A. கதாநாயகியிடம் புதிரைக் கேட்கும் ஹீரோவின் பெயரைக் கண்டுபிடிக்கச் சொல்லுதல்
B. பாலினத்தைக் கண்டுபிடிக்கச் சொல்லி வரும் புதிர்கள்
C. மனநிலையை அறிய நடத்தப்படும் பரிசோதனைகள் (சைக்யாட்ரிஸ்ட்கள் கிரிமினல்களை ஆராய்தல்)

Situation 12: Obtaining – விரும்பியதை அடைய நினைத்தல்
பல சமயங்களில், நமக்கு எதாவது ஒரு பொருளோ வேலையோ பிறரிடமிருந்து தேவைப்படும். அப்போது அவர்களை நாம் அணுகுவதுண்டு. ஆனால், அவர்கள் நமது கோரிக்கைக்கோ மிரட்டலுக்கோ சம்மதிக்காவிட்டால்? நமக்குத் தேவையான பொருளை அவர்கள் நமக்குத் தர மறுத்தால்? பிரச்னைதான். நம்மால் முடிந்தால் அவர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கலாம். அல்லது அவர்கள் நம்மை விட பெரிய இடத்தில் இருந்தால், மூன்றாவது நபர் அல்லது ஒரு குழுவிடம் சொல்லி, அவர்கள் மூலம் அந்தப் பொருளை அடைய நினைக்கலாம். இந்த மூன்றாவது நபரோ குழுவினரோ மத்தியஸ்தம் செய்பவர்களாக இருப்பார்கள்.
இப்படி இரண்டு தரப்புகளுக்கிடையே ஒரு பொருளை முன்வைத்து நடக்கும் போராட்டமே இந்த பனிரண்டாவது சிச்சுவேஷன்.
இந்த சிச்சுவேஷனுக்குத் தேவையான விஷயங்கள் இரண்டு வகைப்படும்.
ஒன்று – பொருளை அடைய நினைப்பவர் & பொருளைத் தர மறுப்பவர்
இரண்டு – மத்தியஸ்தம் செய்பவர் மற்றும் ஒருவருக்கொருவர் சண்டையிடும் இரண்டு தரப்புகள்
இரண்டு – மத்தியஸ்தம் செய்பவர் மற்றும் ஒருவருக்கொருவர் சண்டையிடும் இரண்டு தரப்புகள்
இந்த சிச்சுவேஷன் மூன்று வகைப்படுகிறது.
1. சூழ்ச்சியாலோ அல்லது வலுக்கட்டாயமாகவோ ஒரு பொருளை அடைய நினைத்தல்
2. பேச்சுத்திறமை அல்லது வாதத்திறமையினால் மட்டுமே ஒரு பொருளை இறுதியில் அடைதல்
3. மத்தியஸ்தம் செய்பவர் ஒருவரை வைத்துக்கொண்டு வாதிட்டு ஒரு பொருளை அடைதல்
2. பேச்சுத்திறமை அல்லது வாதத்திறமையினால் மட்டுமே ஒரு பொருளை இறுதியில் அடைதல்
3. மத்தியஸ்தம் செய்பவர் ஒருவரை வைத்துக்கொண்டு வாதிட்டு ஒரு பொருளை அடைதல்
இந்த பனிரண்டாவது சிச்சுவேஷனில் இன்னொரு சிறிய மாறுபாடும் இருக்கிறது என்கிறார் போல்டி. அதாவது, ஒரு பொருளை இன்னொருவரிடமிருந்து அடைய முயற்சிக்கும்போதே அவரது மனதையும் கவர்ந்து வசப்படுத்திக் கொள்ளுதல். இந்த சிச்சுவேஷனில் இயல்பாகவே ஒருவர் ஆண் – இன்னொருவர் பெண் என்ற கதாபாத்திர உருவாக்கம் கதைக்கு வலு சேர்க்கிறது அல்லவா?
Situation 13: Enmity of Kinsmen – உறவினர்களின் பகை
உறவினர்களிடையே பகை என்பது எப்போதும் பல கதைகளிலும் திரைப்படங்களிலும் இடம்பெறும் கரு. ஒரு குறிப்பிட்ட உறவினர் இன்னொருவரையோ அல்லது பல உறவினர்களையோ வெறுப்பார். அவர்களிடையே சண்டை நடைபெறும். உதாரணத்துக்கு நமது மகாபாரதம். இதில் ஒரு உறவினருக்கோ அல்லது பல உறவினர்களுக்கோ எதிராகப் பல உறவினர்கள் ஒன்றுசேர்வதும் ஒரு பகுதி.
இந்த சிச்சுவேஷனைப் பற்றி போல்டி சொல்கையில் மூன்று விதிகளை எப்போதும் முன்னுணர வேண்டியிருக்கும் என்கிறார். அவையாவன:
ஒன்று: உறவினர்கள், பகையின் கீழ் ஒன்றாகத் திரளும்போது, எத்தனைக்கெத்தனை ஒன்றுபடுகிறார்களோ அத்தனைக்கத்தனை அவர்களது வெறுப்பின் வெளிப்பாடு ஆபத்தாகவும் கொடூரமானதாகவும் இருக்கும்.
இரண்டு: வெறுப்பு என்பது இரண்டுபுறமும் இருந்தால், இந்த சிச்சுவேஷன் பலம் பெறும். இல்லையேல் ஒருபக்கம் வில்லன்களாகவும் மற்றொருபக்கம் அவர்களிடம் கஷ்டப்படுபவர்களாகவும் ஆகிவிடும். இந்த நிலைக்கு உதாரணமாக 5,7,8 மற்றும் 30வது சிச்சுவேஷன்களை உதாரணமாகக் கொடுக்கிறார் போல்டி (5.Pursuit, 7. Falling prey to cruelty or misfortune, 8. Revolt & 30. Ambition).
மூன்று: ஒற்றுமையாக இருக்கும் உறவினர்களிடையே வெறுப்பை உண்டுசெய்து அவர்களின் உறவுப்பிணைப்பை அறுத்து எறிந்து அவர்களை பரம்பரை எதிரிகள் ஆக்குவதற்கான காரணம் ஒன்றை உருவாக்குதல். இந்தக் காரணம் சக்திவாய்ந்ததாக இருக்கவேண்டும். அப்படி ஒரு காரணத்தை உருவாக்குவதும் அவ்வளவு எளிதல்ல.
இப்போது, இந்த சிச்சுவேஷனின் பல வகைகளைப் பார்ப்போம்.
1. சகோதரர்களிடையே நிலவும் வெறுப்பு
A. ஒரு சகோதரனை பல சகோதரர்கள் வெறுத்தல்
B. சகோதரர்கள் ஒவ்வொருவரும் பிறரை வெறுத்தல் (இந்த வகையில், இருபுறமும் ஒருவரையொருவர் வெறுப்பதைக் கண்டு அல்லலுறும் தாயையும் புதிய கதாபாத்திரமாக சேர்க்கலாம்)
C. உறவினர்களிடையே நிலவும் பகை. இந்தப் பகைக்கு, சுயநலமே காரணம்.

2. தந்தைக்கும் மகனுக்கும் இடையே நிலவும் பகை
A. மகன் தந்தையை வெறுத்தல்
B. தந்தையும் மகனும் ஒருவரையொருவர் இருபுறமும் வெறுத்தல்
C. மகள் தந்தையை வெறுத்தல்
B. தந்தையும் மகனும் ஒருவரையொருவர் இருபுறமும் வெறுத்தல்
C. மகள் தந்தையை வெறுத்தல்
3. தாத்தா, பேரனை வெறுத்தல் (இதிலேயே தாய்மாமா, மருமகனை வெறுப்பதும் வந்துவிடுகிறது)
4. மாமனார் மருமகனை வெறுப்பது
5. மாமியாருக்கு மருமகளின் மீது உள்ள வெறுப்பு
6. குழந்தைகளைக் கொல்லுதல்
4. மாமனார் மருமகனை வெறுப்பது
5. மாமியாருக்கு மருமகளின் மீது உள்ள வெறுப்பு
6. குழந்தைகளைக் கொல்லுதல்
உறவுநிலைகள் பலவகைப்படுவதால், இந்த ‘உறவினர்களின் பகை’ என்ற சிச்சுவேஷனும் உள்ளுக்குள் பல வகைப்படுகிறது. சகோதரர்களின் பகை என்பதை சகோதரிகளின் பகை என்றும் எடுத்துக்கொள்ளலாம். தாய் மகளை வெறுப்பது, சகோதரன் சகோதரியை வெறுப்பது போன்ற பல உதாரணங்கள் இதில் அடங்கும். போலவே, சகோதர சகோதரிகளின் பகையினால் மனம் உடைந்து கஷ்டப்படும் பெற்றோர் என்ற புதிய கோணத்தையும் இங்கே கொண்டுவரலாம்.
Situation 14: Rivalry of Kinsmen – உறவினர்களிடையே நிலவும் போட்டி & பொறாமை
டக்கென்று கவனித்தால் இந்த சிச்சுவேஷன் இதற்கு முந்தைய சிச்சுவேஷன் போலவேதான் இருக்கும். ஆனால், இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், இந்த சிச்சுவேஷனில் இரண்டு உறவினர்களுக்கு இடையே நிலவும் போட்டியும் பொறாமையும் இருவருக்கும் பொதுவான ஒரு பொருளைச் சார்ந்து இருக்கும். உதாரணம் – ஒரு பெண்ணை சார்ந்து இருக்கும். அதாவது, ஒரு பெண்ணுக்காக இருவரும் அடித்துக்கொள்ளுதல். கூடவே, இதில் அந்தப் பெண், ஒரு உறவினரையே விரும்புவாள். இன்னொரு உறவினரை வெறுப்பாள். பெண்ணுக்குப் பதில் சில நேரங்களில் ஆணும் இருக்கலாம். அல்லது சில நேரங்களில் அந்தப் பொதுவான பொருள், ஒரு அஃறிணையாகவும் இருக்கலாம்.
இந்த சிச்சுவேஷன் நான்கு வகைப்படுகிறது.
1.
A. ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனின்மீது வன்மம் கொண்டு அவனை விரோதித்தல் (இதில் ஒரு சகோதரன் நல்லவன். இரண்டு சகோதரர்களுக்கிடையே ஒரு பொதுவான பொருள் இருக்கும். உதாரணம் – இருவரின் தாய். இதில் தாய் ஒருவன் மீதே அன்பு வைத்திருப்பாள். அல்லது இரண்டு சகோதரர்களில் ஒருவனுக்கு மட்டும் பெரும் பணம் கிடைக்கும். இங்கே பொதுவான பொருள் என்பது சொத்து)
B. இரண்டு சகோதரர்கள் ஒருவருக்கொருவர் பொறாமை கொண்டு விரோதித்துக் கொள்ளுதல்
C. இரண்டு சகொதரர்களின் வெறுப்பு, ஒரு சகோதரன் இன்னொருவனின் மனைவியை விரும்புதலால் நேர்வது
D. சகோதரிகளின் வெறுப்பு

A. தந்தையும் மகனும், திருமணமாகாத ஒரு பெண்ணின் காரணமாக விரோதித்துக்கொள்ளுதல் (இதிலேயே தந்தை மற்றும் இரண்டு மகன்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம். இதிலுள்ள பல காம்பினேஷன்களிலும் புகுந்து விளையாடலாம்).
B. திருமணமான ஒரு பெண்ணின் காரணமாக தந்தையும் மகனும் விரோதித்துக்கொள்ளுதல்
C. ஒரு பெண்ணின் காரணமாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே நேரும் விரோதம். ஆனால் இதில் அந்தப் பெண் ஏற்கெனவே தந்தையை மணந்துகொண்டிருப்பாள்
D. தாயும் மகளும் விரோதித்துக்கொள்ளுதல்

3. Cousinகளுக்கிடையே நேரும் விரோதம்
4. நண்பர்களுக்கிடையே நேரும் விரோதம்
4. நண்பர்களுக்கிடையே நேரும் விரோதம்
இந்த சிச்சுவேஷனுக்கும் முந்தைய சிச்சுவேஷனுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை மறந்துவிடாதீர்கள்.
Situation 15: Murderous Adultry – கள்ளத்தொடர்பும் கொலையும்
இந்த சிச்சுவேஷனை விளக்கவே தேவையில்லை. அன்றாடம் செய்தித்தாள்களில் நாம் காணும் விஷயம் இது. கள்ளத் தொடர்பு, அதனால் பாதிக்கப்பட்ட கணவன் அல்லது மனைவி, இதன்விளைவாக நிகழும் கொலை என்பதே இந்த சிச்சுவேஷன்.
இது இரண்டு வகை.
1.
A. கள்ளக்காதலனுக்காகவோ அல்லது கள்ளக்காதலனாலோ கணவன் கொல்லப்படுதல்
B. கள்ளக்காதலனோ அல்லது காதலியோ கொல்லப்பட்டுவிடுதல்
A. கள்ளக்காதலனுக்காகவோ அல்லது கள்ளக்காதலனாலோ கணவன் கொல்லப்படுதல்
B. கள்ளக்காதலனோ அல்லது காதலியோ கொல்லப்பட்டுவிடுதல்
2. காதலிக்காக மனைவியைக் கொல்லுதல்
இந்த சிச்சுவேஷனை சுவாரஸ்யப்படுத்த சில வழிகளை சொல்கிறார் போல்டி. துரோகமிழைக்கப்பட்ட மனைவியோ கணவனோ ஒன்று – பலம் பொருந்தியவர்களாக இருக்கலாம் அல்லது, இரண்டு – பலமில்லாதவர்களாக, செல்வாக்கில்லாதவர்களாக இருக்கலாம். அதேபோல் இறக்கப்போகும் நபருக்கு எதுவுமே தெரியாமல் இருக்கலாம் அல்லது லேசுபாசாக சந்தேகம் இருக்கலாம்.
அதேபோல், கொலையானவருக்கும் கொலை செய்பவருக்கும் எப்போதோ பரிச்சயம் இருந்து, நட்பு, அன்பு, நன்றி போன்ற உணர்ச்சிகள் இருந்திருக்கலாம். அவர்கள் உறவினர்களாக இருக்கலாம். ஒரே இடத்தில் வேலை செய்பவர்களாகவும் இருக்கலாம். இரண்டு காதலர்களில் ஒருவர், இந்தக் கொலையைச் செய்தபின் இன்னொருவரால் விலக்கப்படலாம். அந்த நபரை இன்னொருவர் காதலித்த நோக்கமே இந்தக் கொலையைச் செய்யவைக்கக்கூட இருக்கலாம். அல்லது இருவருமே கொலையைச் செய்யாமல் மூன்றாவதாக ஒரு நபர் அதை செய்திருக்கலாம். அவர் இந்த இரண்டு காதலர்களில் ஒருவருக்கு நண்பராக இருக்கலாம். அல்லது ஒரு கும்பலே இதில் தொடர்பு கொண்டிருக்கலாம். இந்தக் கொலை நிகழும்போது பலர் அதனால் பாதிக்கப்படலாம். இப்படி எத்தனையோ புதிய விஷயங்களை உருவாக்கலாம்.
Situation 16: Madness – வெறித்தனம்
தேவையான கதாபாத்திரங்கள்:
கதாபாத்திரம் 1 – பித்துப் பிடித்த நபர் (அல்லது) கோபத்தின் உச்சமான வெறியில் இருப்பவர்
கதாபாத்திரம் 2 – முதல் கதாபாத்திரத்தால் பாதிக்கப்படும் நபர்.
கதாபாத்திரம் 2 – முதல் கதாபாத்திரத்தால் பாதிக்கப்படும் நபர்.
வாழ்வின் சில கோரமான தருணங்களில், மிகவும் சாதுவாக இருக்கும் ஒரு நபர் கொடிய வெறிச்செயல் ஒன்றைப் புரிவதைப் பற்றிப் பலமுறை படித்திருக்கிறோம். அப்படிப்பட்ட வெறிதான் இந்த சிச்சுவேஷன். நாமேகூட பலமுறை நமக்கு நெருங்கியவர்களிடம் இப்படி நடந்துகொண்டிருப்போம் (செயலில் அல்ல. அட்லீஸ்ட் பேச்சில்). இப்படிப்பட்ட உச்சபட்ச வெறித்தனத்தின் பல வெளிப்பாடுகள் இதோ.
1.
A. உறவினர்கள் வெறித்தனத்தால் கொல்லப்படுதல். இதைச்செய்பவருக்கு அவர்கள் உறவாக இருக்கவேண்டும்.
B. காதலனோ காதலியோ, காதலி அல்லது காதலனின் வெறியால் கொல்லப்படுதல்
C. வெறித்தனத்தால், இதுவரை வெறுக்கப்படாத நபர் ஒருவரைக் கொல்லுதல் (அல்லது) காயப்படுத்துதல். வெறி கிளம்பும்போது சிலமுறை நமக்குப் பிடித்த நபர்களை நாம் காயப்படுத்துவது உண்டு. அப்படிப்பட்டது இது.

2. கோபவெறியால் தனக்குத்தானே அவப்பெயரை உண்டுசெய்துகொள்ளல்
3. நம்மால் அன்புசெலுத்தப்பட்டவர்களை இப்படிப்பட்ட வெறியால் இழத்தல் (இங்குதான் காளிதாஸரின் சாகுந்தலம் உதாரணமாக வருகிறது. துஷ்யந்தன் அம்னீஷியாவால் பாதிக்கப்பட்டு சாகுந்தலையை தெரியவே தெரியாது என்று கோபமாக மறுத்தல்).
4. வம்சாவழியின் மரபுவழியாக வரும் பித்துநிலையைப் பற்றிய பயத்தாலேயே வெறியடைதல்

இந்த நான்கு வகைகளில் ’வெறி’ என்ற வார்த்தையால் குறிக்கப்படுவது பைத்தியமாகவும் இருக்கலாம். மனநோய்கள், உளவியல் பிரச்னைகள் போன்றவையும் இந்த வகைகளில் அடங்கும். திடீரென உள்ளிருந்து கிளம்பும் கோபம், சில நேரங்களில் மனநோயாக இருக்க வாய்ப்பு உண்டு.
Situation 17: Fatal Imprudence – உயிராபத்தான மதியீனம்
மதியீனம் என்பது எப்போதாவது எல்லாருக்கும் நேர்வது. வரப்போகும் சூழ்நிலையின் முக்கியத்துவம் தெரியாமல் மதியிழந்து அவசர முடிவு எடுத்து அதனால் பாதிக்கப்படுவதே இந்த சிச்சுவேஷன். பாதிக்கப்படுதல் என்பது, மரணமாகக்கூட இருக்கலாம். அதேபோல் இந்த பாதிப்பு பல விதங்களில் முடியலாம். இந்த சிச்சுவேஷன் மூன்றுவகைப்படும்.
1.
A. மதியீனத்தால் தனக்குத்தானே கேடு விளைவித்துக்கொள்வது (அல்லது) துரதிருஷ்டம் அடைவது
B. மதியீனத்தால் தனக்குத்தானே அவப்பெயரை வரவழைத்துக்கொள்ளல்
A. மதியீனத்தால் தனக்குத்தானே கேடு விளைவித்துக்கொள்வது (அல்லது) துரதிருஷ்டம் அடைவது
B. மதியீனத்தால் தனக்குத்தானே அவப்பெயரை வரவழைத்துக்கொள்ளல்
2.
A. அதீதமான ஆர்வத்தால் (curiosity) தனக்குத்தானே கேடு விளைவித்துக்கொள்ளல்
B. அதீதமான ஆர்வத்தால் தனக்கு விருப்பமான நபர்களை இழத்தல்
A. அதீதமான ஆர்வத்தால் (curiosity) தனக்குத்தானே கேடு விளைவித்துக்கொள்ளல்
B. அதீதமான ஆர்வத்தால் தனக்கு விருப்பமான நபர்களை இழத்தல்
3.
A. தனது அதீதமான ஆர்வத்தால் பிறருக்குக் கெடுதலோ மரணமோ நேருதல்
B. தனது மதியீனத்தால் உறவினருடைய மரணம் நிகழ்தல்
C. தனது மதியீனத்தால் காதலன் அல்லது காதலியின் மரணம் நிகழ்ந்துவிடுதல்
D. தனது இளிச்சவாய்த்தனத்தால் (அல்லது) ஏமாளித்தனத்தால் உறவினர்களின் மரணம் நிகழ்தல்

பொதுவாக imprudence என்னும் மதியீனம் எதனால் நிகழ்கிறது என்று பார்த்தால், ஒன்று – அதீதமான ஆர்வம் அல்லது ஏமாளித்தனம் என்ற இரண்டு சிச்சுவேஷன்கள் நமது மனதில் வராமல் போகாது. எதாவது விஷயத்தில் மூக்கை நுழைக்கும் ஆர்வம் இருந்தால், முன்யோசனை அங்கு இல்லாமல் போய்விடும். அதனால் ஆபத்து (தனக்கோ பிறருக்கோ) நேரலாம். அல்லது, ஏமாளியாக இருந்துவிட்டால், பிறரைப்பற்றிய சிந்தனை இல்லாமல் போய், அதனால் ஆபத்து நேரலாம். (’விக்ரம்’(1986) படத்தில், அந்நிய நாட்டு உளவாளியான ராகவேந்தரைத் தேடி கமல் வருவார். ஆனால் ஆபத்தை உணராத அவரது ஏமாளி மனைவியோ, ராகவேந்தர் வீட்டில் இல்லை என்று கமலிடம் வழிவார். அது ராகவேந்தர் கமலிடம் பிடிபட்டு கண்டபடி சித்ரவதை செய்யப்பட்டு, இறுதியில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வதில் முடியும். இது, தன்னுடைய ஏமாளித்தனத்தால் கணவனின் மரணம் நிகழ்தல் என்ற 3C சிச்சுவேஷனுக்கு உதாரணம்).
இப்படி அதீத ஆர்வம் & ஏமாளித்தனம் என்பன பிரதான விஷயங்களாக இருக்க, பொறாமை, மனிதனின் தேவைகளான தூக்கம், பசி, மோகம், காமம், பகட்டு போன்றவையும் சிலசமயங்கள் மதியீனத்தை நோக்கி கதாபாத்திரங்களை இழுத்துச் செல்கின்றன. இது போன்ற தேவைகளின் மீதான ஆசை அதிகமாகும்போது (அல்லது) இவற்றுக்கான தேவைகள் மனதை அலைக்கழிக்கும்போது, மதியீனம் ஏற்படுகிறது.
Situation 18: Involuntary Crimes of Love – காதலால் நிகழும் தற்செயலான குற்றங்கள்
ஒரு பெண்ணை ஒருவன் காதலிக்கிறான். மணந்துகொள்கிறான். ஆனால் அதன்பின்னர்தான், அந்தப்பெண் உறவுமுறையில் அவனுக்கு சகோதரி முறை என்று தெரிகிறது. அப்போது மணந்தவனின் மனநிலை எப்படி இருக்கும்? இதுபோன்ற உறவுமுறை சிக்கல்கள், பொதுவாக போல்டியின் காலத்தில் இரண்டுவகையில் நாடகங்களைப் பார்க்கும் ஆடியன்ஸுக்கு வெளிப்படுத்தப்பட்டன. ஒன்று – குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு உண்மை தெரியும் அதே நேரத்தில்தான் ஆடியன்ஸுக்கும் அது தெரியவரும். இதனால் கதையின் ஒரே கோணமே மேடையிலும் ஆடியன்ஸின் மனதிலும் ஓடும். இரண்டாவது வகை கொஞ்சம் சுவாரஸ்யமானது. ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் உள்ள இந்த உறவு சிக்கல் யாரேனும் ஒரு நபருக்குத் தெரிந்துவிடுகிறது. ஆனால் அந்த நபர் தனது சுய லாபத்துக்காக அதனைப் பயன்படுத்திக் கொள்கிறான். ஆகவே, இந்த சிக்கல் ஆடியன்ஸுக்கு முதலிலேயே தெரிந்துவிடுகிறது. பதைபதைக்கும் மனதுடன், பொறியை நோக்கி செல்லும் அந்த ஹீரோவையும் ஹீரோயினையும் பார்த்து பதைபதைப்பார்கள் ஆடியன்ஸ். இந்த இரண்டாவது வகைதான் ஹிட்ச்காக்கின் அத்தனை படங்களிலும் இருக்கும். அதாவது, உண்மையை ஆடியன்ஸுக்கு முதலில் சொல்லிவிடுதல். ஆனால் கதாபாத்திரங்களுக்கு அது தெரியாது. இதனால் பல சஸ்பென்ஸ் தருணங்களை உருவாக்க முடியும். ஹிட்ச்காக் இதனை கச்சிதமாக உபயோகப்படுத்திக்கொண்டவர்.
இந்த சிச்சுவேஷனுக்குத் தேவையான கதாபாத்திரங்கள் மூன்று.
கதாபாத்திரம் 1 & 2: காதலில் விழும் ஜோடி.
கதாபாத்திரம் 3: உண்மையை வெளிப்படுத்துபவர்
கதாபாத்திரம் 3: உண்மையை வெளிப்படுத்துபவர்
இந்த சிச்சுவேஷன் மொத்தம் நான்கு வகை.
1.
A. தனது தாயை திருமணம் செய்துகொண்டுவிட்டோம் என்ற உண்மை புரிதல் (இதெல்லாம் கிரேக்க நாடகங்களில் சாதாரணம். ’ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் (Oedipus complex)’ என்ற பிரபலமான வார்த்தை பலருக்குத் தெரிந்திருக்கலாம். இதை உருவாக்கியவர் ஸிக்மண்ட் ஃப்ராய்ட். தனது தாயை ஒரு ஆண்பிள்ளை நேசிப்பது. இதற்கு எதிர்வெட்டாக கார்ல் கஸ்டாவ் ஜங் (Carl Gustav Jung) உருவாக்கிய வார்த்தை Electra complex. தந்தையின் அன்பைப் பெறுவதற்கான முயற்சியில் தாயை முந்திக்கொள்ளவேண்டும் என்று ஒரு பெண் குழந்தை நினைப்பதே இது. சிறுகச்சிறுக தந்தையின்மீது ஒரு ஈர்ப்பு ஏடுபட்டு, சில பெண்கள் தந்தையை மானசீகமாக காதலிக்கவே ஆரம்பித்துவிடுவது).

B. தனது காதலி, உண்மையில் தனக்கு சகோதரி முறை என்பதை தற்செயலாக ஹீரோ தெரிந்துகொள்வது
2.
A. தனது சகோதரியைத்தான் திருமணம் செய்துகொண்டிருக்கிறோம் என்பதை ஹீரோ தெரிந்துகொள்வது
B. ஹீரோ அவனது சகோதரியைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று யாரேனும் சதித்திட்டம் தீட்டி, அதனை நிறைவேற்றுவது (சகோதரி என்பது சகோதரி முறையாகக்கூட இருக்கலாம். அல்லது தொலைந்துபோன சகோதரி- பல வருடங்கள் கழித்து அவளை சந்திக்கும் ஹீரோ காதல்வசப்பட்டு மணந்துகொள்வது – அதன்பின் உண்மை தெரிவது என்றும் இருக்கலாம்).
C. சகோதரன், அவனது சகோதரியை காதலிக்க முனைவது (அதாவது, இன்னும் காதலிக்கவில்லை. ஆனால் அதற்கான விருப்பம் இருக்கிறது. உண்மையைத் தெரிந்துகொண்ட யாரேனும் இதைப்பற்றி ஹீரோவிடம் சொல்லாமல் இருக்கலாம்).

3.தனது மகள் என்பது தெரியாமல் காதலிக்கவோ அல்லது மணம் புரியவோ நினைத்தல்
4.
A. உறவுமுறையில் இருக்கும் பிரச்னை தெரியாமல், திருமணத்துக்கு மீறிய உறவில் ஈடுபட நினைப்பது (அதாவது அடல்ட்ரியில் ஈடுபட முனைவது. சகோதரி அல்லது மகளுடன். இந்த உறவுமுறை ஹீரோவுக்குத் தெரிவதில்லை)
B. உறவுமுறையில் இருக்கும் பிரச்னை தெரியாமல் திருமணத்துக்கு மீறிய உறவில் ஈடுபட்டே விடுவது

Situation 19: Slaying of a kinsman unrecognized – யாரென்றே தெரியாமல் ஒரு உறவினரைக் கொன்றுவிடுவது
ஒரு நபரை இன்னொரு நபர் கொன்றுவிடுகிறார். ஆனால் கொன்ரபின்னர்தான் அவர் இவரது நெருங்கிய உறவினர் (அல்லது) ரத்த சம்மந்தம் உள்ளவர் என்பது புரிகிறது. அந்த சூழ்நிலை எத்தகைய சோகத்தைக் கொண்டுவரும் என்பது நன்றாகப் புரிகிறதல்லவா?
இதற்குத் தேவைப்படும் கதாபாத்திரங்கள் இரண்டு.
கதாபாத்திரம் 1: கொலை செய்பவர்
கதாபாத்திரம் 2: அடையாளம் தெரியாமல் முதல் கதாபாத்திரத்தால் பாதிக்கப்படும் நபர்
கதாபாத்திரம் 2: அடையாளம் தெரியாமல் முதல் கதாபாத்திரத்தால் பாதிக்கப்படும் நபர்
இந்த சிச்சுவேஷன் ஏழு வகைப்படுகிறது.
1.
A. யாரேனும் ஆரூடம் சொல்லியதால் (அல்லது) தெய்வீக ஆணையால், மகளை தெரியாமல் கொலைசெய்யப்போகும் தருணம்வரை வந்துவிட்ட தந்தை. (தந்தைக்கு, அவர் கொல்லப்போவது தனது மகள் என்றே தெரியாமல் இருப்பது).
A. யாரேனும் ஆரூடம் சொல்லியதால் (அல்லது) தெய்வீக ஆணையால், மகளை தெரியாமல் கொலைசெய்யப்போகும் தருணம்வரை வந்துவிட்ட தந்தை. (தந்தைக்கு, அவர் கொல்லப்போவது தனது மகள் என்றே தெரியாமல் இருப்பது).
அசரீரி சொல்லிய வார்த்தைகளை தவறாகப் புரிந்துகொண்டு மகளைக் கொல்லச் சென்ற தந்தையைப்பற்றி இங்கே இருக்கிறது. கிரேக்க நூல் ஒன்று (Demaphon). நம்மூரில்கூட யாரேனும் போலி சாமியார் அல்லது பூசாரி சொன்னதால் பெற்ற மகளை நரபலி கொடுக்க எத்தனித்தவர்களைப் பற்றிப் படிக்கிறோம் அல்லவா?
B. அரசியல் நெருக்கடியால் மகளைத் தெரியாமல் கொலைசெய்ய எத்தனிக்கும் தந்தை
C. காதலில் நேரும் விரோதத்தால் மகளைத் தெரியாமல் கொலைசெய்ய எத்தனிக்கும் தந்தை
D. தனது மகள் என்று தெரியாமல் இருக்கும் பெண்ணின் காதலன் தன்மீது கொண்ட வெறுப்பினால் அந்தப் பெண்ணைக் கொல்ல எத்தனிக்கும் தந்தை
C. காதலில் நேரும் விரோதத்தால் மகளைத் தெரியாமல் கொலைசெய்ய எத்தனிக்கும் தந்தை
D. தனது மகள் என்று தெரியாமல் இருக்கும் பெண்ணின் காதலன் தன்மீது கொண்ட வெறுப்பினால் அந்தப் பெண்ணைக் கொல்ல எத்தனிக்கும் தந்தை
2.
A. மகன் என்று தெரியாமல் அவனைக் கொல்ல எத்தனிக்கும் தந்தை. இதன் உட்பிரிவு, மகன் என்று தெரியாமல் அவனைக் கொன்றே விட்ட தந்தை.
B. மேலே பார்த்த அதே சிச்சுவேஷன். ஆனால் இங்கே மகனைக் கொல்ல நினைப்பது (அல்லது) கொன்றுவிட்டது ஏனெனில், சுயநலம் மற்றும் சூது ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதே. அதாவது, தந்தை இங்கே நிஜமான வில்லன்.
C. இது, மேலே பார்த்த Bயுடன், உறவினர்களின்மேல் தீராத வெறுப்பும் சேர்ந்துகொள்ளல். உதாரணம்: தாத்தாவுக்குப் பேரன் மேல் இருக்கும் வெறுப்பு

3. சகோதரனை யாரென்று தெரியாமல் கொல்ல எத்தனிப்பது. அதேபோல் ஒரு சகோதரி தனது சகோதரன் அல்லது சகோதரியை, பணி நிமித்தமாக கொல்வது.
4. தாயை யாரென்று தெரியாமல் கொன்றுவிடுவது.
5. சூது, கபடம் ஆகியவற்றால் மனது திசைதிருப்பப்பட்டு, தந்தையை அடையாளம் தெரியாமல் கொன்றுவிடுதல். அதேபோல், எந்தக் கபடமும் இன்றி, வெறுமனே தந்தையை யாரென்றே தெரியாமல் கொல்லுதல். போலவே தந்தையை அடையாளம் தெரியாமல் கொல்ல எத்தனித்தல். அதேபோல் தந்தையை அடையாளம் தெரியாமல் அவமானப்படுத்துதல்.

6.
A. பழிவாங்கும் வெறியின்கீழ் தாத்தாவை அடையாளம் தெரியாமல் கொல்லுதல். இந்தக் கொலைக்குக் காரணம் பிறரது தூண்டுதலாக இருக்கும்.
B. எந்தத் தூண்டுதலும் இல்லாமல், தாத்தாவை அடையாளம் தெரியாமல் கொல்லுதல்
C. மனைவியின் தந்தையை எவரது தூண்டுதலும் இல்லாமல் தானாகவே (அடையாளம் தெரியாமல்) கொல்லுதல்

7.
A. காதலுக்குரிய ஒரு பெண்ணை அனிச்சையாகக் கொல்லுதல்
B. காதலுக்குரிய பெண்ணையோ ஆணையோ அடையாளம் தெரியாமல் கொல்ல முனைதல்
C. அடையாளம் தெரியாத மகனைக் காப்பாற்றுதலில் தோல்வி
A. காதலுக்குரிய ஒரு பெண்ணை அனிச்சையாகக் கொல்லுதல்
B. காதலுக்குரிய பெண்ணையோ ஆணையோ அடையாளம் தெரியாமல் கொல்ல முனைதல்
C. அடையாளம் தெரியாத மகனைக் காப்பாற்றுதலில் தோல்வி
இந்த பத்தொன்பதாம் சிச்சுவேஷனின் இறுதியில் இருக்கும் துணுக்குச்செய்தி என்னவெனில், ஷேக்ஸ்பியர் இந்த சிச்சுவேஷனை அவரது ஒரு நாடகத்தில் கூட பயன்படுத்தவில்லை என்பதே.
Situation 21: Self Sacrificing for an ideal – குறிக்கோளுக்காக தியாகம் செய்தல் (அல்லது) உயிர்துறத்தல்
நமது அரசியல் தலைவர்கள் அடிக்கடி இந்தப் பதத்தை உபயோகப்படுத்துவதைக் காணலாம். ஆனால் அவர்களின் பேச்சால் தூண்டப்பட்டு தற்கொலை செய்துகொள்வது, அவர்களது தொண்டர்கள் மட்டுமே. தலைவர்கள் ஜாலியாகப் பேசிவிட்டு பங்களாவில் ஓய்வெடுப்பதைக் காணலாம்.
ஏதேனும் ஒரு குறிக்கோளுக்காக உயிரைத் துறத்தல் என்பது சரித்திர காலத்தில் ஒரு மாண்பாகக் கருதப்பட்டது. அத்தகைய சிச்சுவேஷனான இதில் தேவையான கதாபாத்திரங்கள் இரண்டு.
கதாபாத்திரம் 1: ஹீரோ
கதாபாத்திரம் 2: ஹீரோ உயிர்துறக்கும் குறிக்கோள். இது ஒரு மனிதனாகவோ ஒரு பொருளாகவோ இருக்கலாம்.
கதாபாத்திரம் 2: ஹீரோ உயிர்துறக்கும் குறிக்கோள். இது ஒரு மனிதனாகவோ ஒரு பொருளாகவோ இருக்கலாம்.
இந்த சிச்சுவேஷன் நான்கு வகைப்படும்.
1. A. தான் சொன்ன வார்த்தை (அல்லது) கொடுத்த வாக்குக்காக உயிர்துறத்தல்
B. தனது மக்களின் வெற்றிக்காக உயிர்துறத்தல்
C. தனது பெற்றோருக்காகவோ அல்லது மூதாதையர்களுக்காகவோ உயிர்துறத்தல்
D. தனது மதத்துக்காக (அல்லது) தனது கண்டுபிடிப்பு, கொள்கை போன்றவற்றுக்காக உயிர்துறத்தல் (கலிலியோ ஒரு உதாரணம்). அதேபோல் தனது மன்னனுக்காக உயிர்துறத்தல்

2. A. அன்பு, காதல் போன்றவையும், அதன்பின்னர் உயிரும், மதத்துக்காக (அல்லது) தனது கண்டுபிடிப்பு, கொள்கை போன்றவற்றுக்காக துறத்தல்
B. அன்பு, காதல் போன்றவையும், அதன்பின்னர் உயிரும், ஒரு லட்சியத்துக்காக துறத்தல்
C. தனது நாட்டுக்காக காதலைத் துறத்தல்
B. அன்பு, காதல் போன்றவையும், அதன்பின்னர் உயிரும், ஒரு லட்சியத்துக்காக துறத்தல்
C. தனது நாட்டுக்காக காதலைத் துறத்தல்
3. வாழ்க்கை வசதிகளை, கடமைக்காக துறத்தல்
4. மரியாதை, மதிப்பு, புகழ் போன்றவைகளை தனது நம்பிக்கை (அல்லது) மதம் (அல்லது) கொள்கை போன்றவற்றுக்காக தியாகம் செய்தல்
4. மரியாதை, மதிப்பு, புகழ் போன்றவைகளை தனது நம்பிக்கை (அல்லது) மதம் (அல்லது) கொள்கை போன்றவற்றுக்காக தியாகம் செய்தல்
(தொடரும்)…
CONVERSATION