font, blue, and ?ெ?்?ி?்??ி?ை ????்.

க்வெண்டின் டாரண்டினோ Pulp Fiction

’Like a lot of guys who had never made films before, I was always trying to figure out how to scam my way into a feature. The ones you’ve seen a zillion times—the boxer who’s supposed to throw a fight and doesn’t, the Mob guy who’s supposed to take the boss’s wife out for the evening, the two hit men who come and kill these guys. It would be “an omnibus thing,” a collection of three caper films, similar to stories by such writers as Raymond Chandler and Dashiell Hammett in 1920s and 1930s pulp magazines. That is why I called it Pulp Fiction – Quentin Tarantino.
பன்னிரண்டு பள்ளிக்கூட நோட்டுப்புத்தகங்களில், யாருக்குமே புரியாத தனது கிறுக்கலான, எக்கச்சக்க எழுத்துப்பிழைகள் இருந்த ஒரு விபரீதமான கையெழுத்தில் டாரண்டினோ எழுதியிருந்த பல்ப் ஃபிக்‌ஷன்’ திரைக்கதையை முதலில் பார்த்த அவரது தோழி லிண்டா சென் (Linda Chen), இந்தத் திரைக்கதை பிந்நாட்களில் ஒரு க்ளாஸிக் திரைக்கதையாக மாறும் என்பதைக் கனவில் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. ஹாலிவுட்டின் திரைக்கதை ஜாம்பவானான ராபர்ட் டௌன் (Robert Towne – Chinatown, Mission Impossible part 1 & 2, Days of Thunder, the Firm, Godfather –uncredited), லிண்டாவை ஒரு டைப்பிஸ்ட்டாகத் தன்னிடம் வேலைக்கு அமர்த்தியிருந்தார். லிண்டா, ராபர்ட் டௌனிடம் ஒரு திரைக்கதை கன்ஸல்ட்டண்ட்டாகவும் இருந்தார். டாரண்டினோவுக்கு லிண்டாவின் வேலை பற்றித் தெரிந்திருந்ததால் அடிக்கடி லிண்டாவிடம் பேசுவார். தனது திரைக்கதையை டைப் செய்து கொடுக்க யாரோ ஒரு டைப்பிஸ்ட்டை நாடுவதைவிடவும், லிண்டா போன்ற திரைக்கதையில் தனது இன்புட்களைக் கொடுக்கக்கூடிய ஒரு நபரையே விரும்பினார் டாரண்டினோ. இதற்கிடையில் Reservoir Dogsமூலம் தயாரிப்பாளராகியிருந்த டாரண்டினோவின் நண்பர் லாரன்ஸ் பெண்டர், புதிய திரைக்கதைக்காக டாரண்டினோவை நெருக்கத் துவங்கியிருந்தார்.
ஆனால், ரிஸர்வாயர் டாக்ஸ் வெளிவந்ததும் ஹாலிவுட்டின் புகழேணியில் மெல்ல ஏறிக்கொண்டிருந்த டாரண்டினோவுக்குப் பல ஸ்டுடியோக்களிடமிருந்து படங்களை இயக்க வாய்ப்புகள் வந்திருந்தன. அதில் ஒன்று – Speed. இன்னொன்று – Men in Black. இந்த இரண்டு படங்களையும் கொஞ்சம் கூட யோசிக்காமல் தவிர்த்தார் டாரண்டினோ. காரணம் அவர் புதிதாக எழுதிக்கொண்டிருந்த திரைக்கதை. அதுமட்டும் இல்லாமல் தனது திரைக்கதைகளைத்தான் படமாக இயக்கவேண்டும் என்பதில் மிகவும் உறுதியாகவும் இருந்தார்.
அப்படிப்பட்ட புதிய திரைக்கதையை எழுதுவதற்காக ஆம்ஸ்டர்டாமில் சில மாதங்கள் தனியாக அறை ஒன்றை எடுத்துக்கொண்டு தங்கினார். அங்கேதான் அந்தப் பன்னிரண்டு நோட்டுப்புத்தகங்கள் நிரம்பின. ரிஸர்வாயர் டாக்ஸ் எடுத்த நிமிடம் வரை தனது வாழ்க்கையின் 29 வயதுகளையும் ஏழையாகவும் கடனாளியாகவுமே கழித்தவர் டாரண்டினோ. எனவே, ரிஸர்வாயர் டாக்ஸில் அவருக்குக் கிடைத்த 50,000 டாலர்களை வைத்துக்கொண்டு ஆம்ஸ்டர்டாம் கிளம்பினார். வாழ்க்கையில் முதன்முறையாக அமெரிக்காவுக்கு வெளியே டாரண்டினோ சென்ற அனுபவம் அது. ஆம்ஸ்டர்டாமில் மரியுவானா சட்டபூர்வமாகவே அங்கீகரிக்கப்பட்டிருந்தது. அதேபோல் அங்கே விபசாரமும் சட்டபூர்வமான தொழில். அத்தகைய சுதந்திரமான ஒரு இடத்தில் அமர்ந்துகொண்டு சில மாதங்கள் செலவழித்து டாரண்டினோ எழுதிய திரைக்கதைதான் பிந்ந்நாட்களில் உலகத் திரைப்பட வரலாற்றில் முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்தது.
இதன்பின்னர் டாரண்டினோவின் விடியோ ஆர்க்கைவஸ் சக நண்பர் ரோஜர் ஆவெரியும் ஆம்ஸ்ட்டர்டாம் வந்தார். சில வருடங்களுக்கு முன்னர் வீடியோ ஆர்க்கைவ்ஸில் வேலை செய்துகொண்டிருந்தபோதே டாரண்டினோவும் ஆவெரியும் ஒரு கதையை முடிவுசெய்துவைத்திருந்தனர். அதன்படி, தாதாவின் மனைவியை வெளியே கூட்டிச்செல்லும் கதையை டாரண்டினோ எழுதுவதாகவும், பாக்ஸர் ஒருவனுக்கு அந்தத் தாதா பணம் கொடுக்க முயலும் கதையை ஆவெரி எழுதுவதாகவும் திட்டம். அதேபோல் மூன்றாவதாக இன்னொரு கதையை (இரண்டு அடியாட்கள் பாஸின் பெட்டியை எடுத்துவரும் கதை) இன்னொரு நண்பர் எழுதுவதாகத் திட்டமிட்டனர். ஆனால் அந்த நண்பர் இவர்களுடன் சேராததால் அந்தக் கதையையும் டாரண்டினோ எழுதுவதாக முடிவானது. ரிஸர்வாயர் டாக்ஸை எழுதுவதற்கு முன்னர் தனது முதல் திரைக்கதையாக இதைத்தான் டாரண்டினோ எழுத விரும்பினார். ஆனால் தனது தாயின் வீட்டில் மூன்றரை வாரங்கள் அமர்ந்து டாரண்டினோ எழுதிய திரைக்கதை ரிஸர்வாயர் டாக்ஸாக அமைந்தது. காரணம், எழுதத் துவங்கும்போதே அந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் தன்னை முழுதும் ஆக்கிரமித்துக்கொண்டதாக டாரண்டினோ சொல்லியிருக்கிறார்.
ஆம்ஸ்ட்டர்டாமில் அமர்ந்துகொண்டு டாரண்டினோவும் ஆவெரியும் விவாதித்தனர். பாக்ஸரின் கதையை ஆவெரி முழுதும் சொல்ல, அந்தக் கதையை எடுத்துக்கொண்டு தனது பாணியில் டாரண்டினோ திரைக்கதை எழுதினார். ஆவெரி சொன்ன கதைக்கு 25,000 டாலர்கள் அவருக்கு டாரண்டினோவால் அளிக்கப்பட்டன. படத்தின் படப்பிடிப்பு துவங்கியதும் ஆவெரிக்கு ஒரு தொலைபேசி எழைப்பு டாரண்டினோவிடமிருந்து வந்தது. ‘படத்தின் திரைக்கதைக்குக் க்ரெடிட்ஸ் வழங்க முடியாது. ஆனால் கதைக்கு டைட்டிலில் க்ரெடிட்ஸ் வழங்கமுடியும்; எனவே அதை ஏற்றுக்கொள்; ஒருவேளை மறுத்தால் உன் பாக்ஸர் கதையை நீக்கிவிட்டு நானே வேறு ஒரு கதை எழுதி உள்ளே சேர்த்துவிடுவேன்; உனக்கு எதுவுமே கிடைக்காது’ என்று டாரண்டினோ சொன்னதாக ஆவெரி பிற்காலத்தில் சொல்லியிருக்கிறார். காரணம், டாரண்டினோவுக்கு எப்போதும் தனது கதையைப் படமாக எடுக்கும்போது தனது பெயர்தான் வரவேண்டும் என்ற எண்ணம் உண்டு. ஆவெரி ஒப்புக்கொண்டார்.  டாரண்டினோ ஆவெரியை வஞ்சித்தார் என்று ஒரு கருத்து உண்டு. அதேசமயம் ஆவெரியிடமிருந்து வந்தது கதை மட்டும்தான். திரைக்கதையை டாரண்டினோதான் எழுதினார் என்பதால் அது சரியான லாஜிக்தான் என்றும் ஒரு கருத்து திரைப்பட ரசிகர்களிடம் உண்டு. பிறகு இது ஆவெரியிடம் கேட்கப்பட்டபோது அப்படியெல்லாம் நடக்கவில்லை என்று ஆவெரி மறுத்தார் என்பது தனிக்கதை.
இதற்கு முன்னால், ரிஸர்வாயர் டாக்ஸின் பிரபலத்தால் டாரண்டினோ ஹாலிவுட்டின் பிரபல நடிகர் டான்னி டெவீட்டோவை சந்திக்க நேர்ந்தது. (Get Shorty & Be Cool படங்களை நினைவிருக்கிறதா?). அவரது திரைப்பட நிறுவனத்தின் சார்பில் டாரண்டினோவை வைத்து ஒரு படம் தயாரிப்பதாக டான்னி டெவீட்டோ சொல்லியிருந்தார்.
பிரம்மாண்டமான, தலையணை சைஸில் 159 பக்கங்களைக் கொண்ட ஒரு திரைக்கதை டான்னி டெவீட்டோவுக்கு ஒருநாள் வந்து சேர்ந்தது. ‘பல்ப் ஃபிக்‌ஷன்’ என்ற பெயரில். டெவீட்டோவுக்கு அது மிகவும் பிடித்தது. அவருக்கும் ட்ரைஸ்டார் நிறுவனத்துக்கும் ஒரு ஒப்பந்தம் இருந்ததால் ட்ரைஸ்டாரிடம் பேசினார் டெவீட்டோ. ஆனால் அப்போதுதான் வெள்ளைமாளிகையில் நடந்த ஒரு கருத்தரங்கில் ‘ஹாலிவுட் படங்களில் வன்முறை அதிகமாக இருப்பதைத் தடுக்க என்ன செய்யலாம்’ என்று ட்ரைஸ்டாரின் அப்போதைய சேர்மன் மைக் மெடேவாய் (Mike Meedavoy) பேசியிருந்ததால், அந்தத் திரைக்கதையை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலாது என்று டான்னி டெவீட்டோவிடம் சொல்லிவிட்டனர். இதன்பிறகு பல ஸ்டுடியோக்களை அணுகினார் டெவீட்டோ. யாருமே இந்தத் திரைக்கதையை எடுக்க விரும்பவில்லை. அதீத வன்முறை திரைக்கதையில் இருக்கிறது என்று அவர்கள் நினைத்ததே காரணம்.
இதன்பிறகு, ஹார்வி வெய்ன்ஸ்டீன் என்ற தயாரிப்பாளரிடம் டான்னி டெவீட்டோ பேசினார். (லார்ட் ஆஃப் த ரிங்ஸ் பற்றிய தொடரையும் War of the Ring மின்புத்தகத்தையும் படித்திருக்கும் நண்பர்களுக்கு, எட்டுவித கட்டளைகள் போட்ட ஹார்வி வெய்ன்ஸ்டீனைப் பற்றித் தெரிந்திருக்கும். இவரால் பீட்டர் ஜாக்ஸன் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஆனால் இன்றுவரை டாரண்டினோவைத் தங்கத்தட்டில் வைத்துத் தாங்குகிறார்கள் வெய்ன்ஸ்டீன் சகோதரர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி விதி போலும்). மிராமேக்ஸ் ஸ்டுடியோ டிஸ்னியுடன் இணைந்திருந்த காலம் அது. இந்த எண்பது மில்லியன் டாலர் வியாபாரத்தைப் பற்றி டார்ட் ஆஃப் த ரிங்ஸ் தொடரில் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். துடிப்புடன் வெயின்ஸ்டீன் சகோதரர்கள் செயல்பட்டுவந்த காலகட்டம் இது. தனது பிஸியான அலுவல்களில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு சில நாட்கள் ’மார்த்தா’ஸ் வினியார்ட்’ (Martha’s Vineyard) என்ற மாஸச்சூஸெட்ஸைச் சேர்ந்த பகுதிக்கு விமானத்தில் செல்ல இருந்தார் ஹார்வி வெய்ன்ஸ்டீன். அப்போதுதான் அவரது கைகளில் இந்தத் தலையணை சைஸ் திரைக்கதை திணிக்கப்பட்டது. பொதுவாக ஹாலிவுட்டின் திரைக்கதைகள் 120 பக்கங்களைத் தாண்டுவதில்லை என்பது நமது தளத்தைப் படிப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும். அதிலும் புதிதாக வரும் இயக்குநர்களுக்கு முடிந்தவரை 110-115 பக்கங்களுக்குள்தான் திரைக்கதை எழுத வாய்ப்புத் தரப்படும். ஆனால் க்வெண்டின் டாரண்டினோ என்ற இந்தப் புதிய இயக்குநரின் திரைக்கதை 159 பக்கங்களில் இருந்ததால், கடுப்புடன் தான் ஃப்ளைட்டில் ஏறினார் ஹார்வி வெயின்ஸ்டீன்.
ஆனால் இரண்டே மணி நேரங்களில் திரைக்கதையை ஹார்வியிடம் கொடுத்த ரிச்சர்ட் க்ளாட்ஸ்டீன் என்பவருக்கு ஹார்வியிடமிருந்து ஃபோன் வருகிறது.
‘திரைக்கதையின் முதல் காட்சி அட்டகாசமாக இருக்கிறது. திரைக்கதை முழுதுமே இப்படித்தான் இருக்குமா?’
‘படித்துத்தான் பாருங்களேன்’
மறுபடியும் ஒரு மணி நேரத்தில் ஃபோன்.
‘இந்த ஆளுக்கு என்ன பைத்தியமா? பாதித் திரைக்கதையிலேயே பிரதான பாத்திரம் (வின்ஸெண்ட் வேகா) செத்துவிட்டது. இதற்குப்பின் என்ன செய்து திரைக்கதையை சுவாரஸ்யமாக வைக்கப்போகிறான் இந்த க்வெண்டின்?’
‘இதே வேகத்தில் படித்து முடித்துவிடுங்களேன்… உங்களுக்கே புரிந்துவிடும்’
உடனடியான பதிலாக, ‘இந்த ஆளுடன் வியாபாரம் பேச ஆரம்பியுங்கள்.. அவனுக்கு என்னென்ன நிபந்தனைகள் என்று கேளுங்கள்.. இந்தத் திரைக்கதையை விடவே முடியாது. இதனை நாம்தான் தயாரிக்கப்போகிறோம்’ என்று கர்ஜித்தார் ஹார்வி வெய்ன்ஸ்டீன்.
pulp_fiction
உடனடியாக தாய் நிறுவனமான டிஸ்னியிடம் பேசினார் ஹார்வி. டிஸ்னி மிராமேக்ஸை வாங்கியிருந்தபோது, புத்திசாலித்தனமாக அந்த வியாபார ஒப்பந்தத்தில் சுயமாக முடிவெடுக்கக்கூடிய சில ஷரத்துகளை ஹார்வி சேர்த்திருந்தார். அதனை டிஸ்னியும் ஒப்புக்கொண்டிருந்தது. இதனால், அப்போதைய டிஸ்னி சேர்மனான ஜெஃப்ரி காட்ஸன்பெர்க்கிடம் ‘இந்தப் படத்தை நான் தயாரிக்கப்போகிறேன். இதை உங்களிடம் ஒரு செய்தியாகத்தான் சொல்கிறேன். எனக்கு இதைத் தயாரிக்க முழு உரிமை இருந்தாலும் இதை உங்களிடம் சொல்லக்காரணம், என் முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன் என்பதைச் சொல்லத்தான்’ என்று தெளிவாகப் பேசினார் ஹார்வி. காட்ஸென்பெர்க்கும் திரைக்கதையைப் படித்தார். ‘இதுவரை நான் படித்த திரைக்கதைகளிலேயே இது அற்புதமானது. ஆனால் அந்த ஹெராயின் காட்சியில் மட்டும் கொஞ்சம் பார்த்து எடுக்கச்சொல்’ என்பது காட்ஸென்பெர்க்கின் பதில்.
இப்படி, திரைக்கதையைப் படித்த அத்தனை பேரையும் டாரண்டினோவால் கவர முடிந்தது. அதுதான் இன்றுவரை அவரது வெற்றியின் காரணம். எந்த டாரண்டினோ திரைக்கதையாக இருந்தாலும் அவரது முதல் 5 பக்கங்களைப் படித்துவிட்டால் முழுத் திரைக்கதையையும் படிக்காமல் வைக்க முடியாது.
இதன்பிறகு நடிகர்களுக்குத் திரைக்கதை அனுப்பப்பட்டது. ‘இந்தத் திரைக்கதையை வெளியே லீக் செய்தால் அடியாட்களை வைத்து உங்கள் எலும்பை எண்ணி விடுவோம்’ என்ற டிஸ்க்ளெய்மருடன்.
டாரண்டினோவின் ஏஜெண்ட்டின் பெயர் மைக் சிம்ப்ஸன். துவக்கத்தில் இருந்து இப்போதுவரை அவர்தான் ஏஜெண்ட். அவர்தான் டாரண்டினோ சார்பில் ஸ்டுடியோக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவது வழக்கம். அவர், தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீனிடம் ஒரு பட்டியலைக் கொடுத்திருந்தார்.
1. Final Cut: படம் டாரண்டினோ நினைத்தபடிதான் வெளிவரும். அதில் இருக்கும் காட்சிகளை டாரண்டினோதான் முடிவுசெய்வார். தயாரிப்பாளர்கள் அதில் தலையிடமுடியாது.
2. படம் இரண்டரை மணி நேரம் ஓடும்.
3. படத்தில் நடிக்கும் நடிகர்களை டாரண்டினோதான் தேர்வு செய்வார்.
இதன்படி நடிக நடிகையர்களையும் டாரண்டினோ தேர்வு செய்து அனுப்பியிருந்தார். ஹார்வி எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டார். ஒன்றே ஒன்றைத் தவிர. ஜான் ட்ரவோல்டா இந்தப் படத்தில் நடிக்கக்கூடாது என்பதே அவரது ஒரே நிபந்தனை. அவருக்கு ட்ரவோல்டாவைப் பிடிக்காது.
இந்தத் திரைக்கதை ஹாலிவுட் ஸ்டுடியோக்களிடம் அனுப்பப்பட்டிருந்தபோது ப்ரூஸ் வில்லிஸ் இந்தக் கதையில் வின்ஸெண்ட் வேகாவாக நடிக்க ஆர்வம் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு ஏற்கெனவே டாரண்டினோ தேர்வு செய்திருந்தது – ஜான் ட்ரவோல்டாவை.
படத்தில் வரும் பாக்ஸர் வேடத்துக்கு டாரண்டினோ தேர்வு செய்தது – மேட் டில்லன் Matt Dillon). There is Something about Mary படத்தில் துப்பறிவாளராக நடிப்பாரே, அந்த நடிகர். ஆனால் அவர் திரைக்கதையைக் கேட்டுவிட்டு, திரைக்கதையைப் படித்துப் பார்த்தே முடிவைச் சொல்லப்போவதாகச் சொன்னதால் அவரை டாரண்டினோ நீக்கிவிட்டார். காரணம், கதை பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டு, முடிவை அப்புறம் சொல்கிறேன் என்று சொன்ன டில்லனை அவருக்குப் பிடிக்கவில்லை. எனவே, அந்த வேடத்துக்கு ப்ரூஸ் வில்லிஸை டாரண்டினோ கேட்க, வில்லிஸ் ஒப்புக்கொண்டார்.
எழுபதுகளின் இறுதியில் 1977ல் Saturday Night Fever வெளிவந்து, ட்ரவோல்டாவை சூப்பர்ஸ்டார் ஆக்கியிருந்தது. அதன் அடுத்த வருடமே Crease வந்து அவரை இன்னும் சில வருடங்களுக்கு ஒரு சூப்பர் ஸ்டாராகவே நிலைநிறுத்தும் வேலையைச் செய்திருந்தது. 1970ல் இருந்து 1980 வரையிலான பத்து ஆண்டுகளின் சூப்பர்ஹிட்களில் இவைகளும் இருந்தன. 24 வயதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தார் ட்ரவோல்டா, இது ஒரு சாதனை. இதன்பின் 1980ல் Urban Cowboy வந்து, ட்ரவோல்டாவை நன்றாகவே நிலைநிறுத்தியிருந்தது. இதன்பிறகுதான் அவரது decline துவங்கியது. கிட்டத்தட்ட பதினான்காண்டுகளில் வெகுசில நல்ல படங்களையே ட்ரவோல்டாவால் நடிக்க முடிந்தது. Look Who’s talking (1989) அவற்றில் ஒன்று (இந்தப் படத்தைப் பற்றி Get Shortyல் ஜான் ட்ரவோல்டா கிண்டலடிப்பதைக் காணலாம். தன்னைப்பற்றித் தானே அடித்துக்கொண்ட கிண்டல் அது).
பல ஆண்டுகள் ஒரு ஃப்ளாப் ஸ்டாராகவே ட்ரவோல்டா இருந்த காரணத்தால் ஹார்வி வெய்ன்ஸ்டீன் அவரை நிராகரித்தார். அதற்குப் பதில் டானியல் டே லூயிஸையோ அல்லது ஷான் பென்னையோ அல்லது வில்லியம் ஹர்ட்டையோ போட்டுக்கொள்ளலாம் என்று பரிந்துரைத்தார். அதேசமயம் Die Hard வெளிவந்து ப்ரூஸ் வில்லிஸையும் அப்போது சூப்பர் ஸ்டார் ஆக்கியிருந்தது. அவருமே ட்ரவோல்டாவின் பாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்று தீவிரமாக இருந்தார்.
பல்ப் ஃபிக்‌ஷனில் டாரண்டினோவின் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய இரவு. டாரண்டினோவின் ஏஜெண்ட் மைக் சிம்ப்ஸன் ஹார்வி வெய்ன்ஸ்டீனிடம் ஃபோனில் பேசுகிறார். அப்போது ஹார்வி, ‘எல்லாவற்றையும் ஒப்புக்கொள்கிறேன். ட்ரவோல்டாவைத் தவிர. மற்றதெல்லாம் நாளை அலுவலகத்தில் பேசிக்கொள்ளலாமே?’ என்று சொல்கிறார். ஆனால் சிம்ப்ஸன், ‘எல்லாவற்றையும் இப்போதே பேசினால்தான் உண்டு. காரணம் எங்களிடம் இன்னும் இரண்டு தயாரிப்பாளர்கள் வரிசையில் இருக்கிறார்கள். உங்களால் முடியாது என்றால் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். உங்களுக்குப் பதினைந்து நொடிகள்தான் என்னால் கொடுக்க முடியும். அதற்குமேல் போனால் ஃபோனை வைத்துவிடுவேன். அதன்பின் இந்தப் படம் உங்களுடையது அல்ல’ என்று பேசிவிட்டார். அதுமட்டுமல்லாமல் 15….14…13.. என்று எண்ணவும் ஆரம்பித்துவிட்டார். எண்ணிக்கை எட்டை அடைந்தபோது ஹார்வியின் சகோதரர் பாப் வெய்ன்ஸ்டீன் ஹார்வியை நிர்ப்பந்திக்க, ஹார்வி வேண்டாவெறுப்பாக எல்லா நிபந்தனைக்கும் ஓகே சொல்ல, ஒப்பந்தம் இனிதே முடிந்தது.
கதையில் ப்ரூஸ் வில்லிஸ் இருந்ததால், தயாரிப்பு தொடங்கும் முன்னரே வெளிநாட்டு உரிமை 11 மில்லியனுக்கு விலைபோனதால் பட்ஜெட்டான எட்டு மில்லியன் டாலர்களை மொத்தமாக ஹார்வியால் வசூலித்துவிட முடிந்தது.
இதன்பிறகு கதாநாயகி மியா வாலஸாக உமா தர்மன். எத்தனையோ முன்னணிக் கதாநாயகிகள் இருந்தும் அப்போது 23 வயதே ஆகியிருந்த உமா தர்மன்தான் டாரண்டினோவின் தேர்வாக இருந்தது.
படத்தின் இன்னொரு பிரதான கதாபாத்திரமான ஜூல்ஸுக்கு டாரண்டினோ தேர்வு செய்திருந்தது – லாரன்ஸ் ஃபிஷ்போர்ன். ஆனால் அவர் அதனை மறுத்துவிட, அப்போது இளம் நடிகர்களாக இருந்த ஸாமுவேல் ஜாக்ஸனுக்கும் பால் கால்டெரோனுக்கும் போட்டி ஏற்பட்டது. உண்மையில் இருவரிடமும் ‘உனக்காகத்தான் இந்த வேடம்’ என்று டாரண்டினோ உறுதியளித்திருண்டார். ஒரே நாளில் இருவருக்கும் ஆடிஷன் குறிக்கப்பட்டது. இது ஸாமுவேல் ஜாக்ஸனுக்குத் தெரியாது. கால்டெரோன் ஏற்கெனவே ஒருமுறை படத்தின் வசனங்களை அட்டகாசமாகப் பேசியிருந்தார். அவருக்குத்தான் இந்த வேடம் போகப்போகிறது என்பது பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. அன்று இருவரில் முதலில் ஆடிஷனுக்குச் சென்றவர் பால் கால்டெரோன்தான். ஆனால், அன்று டாரண்டினோ சற்றே தாமதமாக வந்ததால் லேசாக கால்டெரோன் டென்ஷன் ஆனார். கூடவே, ஆடிஷனில் வசனங்களை கால்டெரோன் பேசியபோது தயாரிப்பாளர்களில் ஒருவரும் கூடவே வசனங்களை உச்சரிக்கத் துவங்கினார். இதனால் கால்டெரோனின் வசன உச்சரிப்பு பாதிக்கப்பட்டது. நேரம் செல்லச்செல்ல அந்த டென்ஷன் அதிகம் ஆனது. வசனங்களில் தடுமாறினார் கால்டெரோன். அந்த வேடம் அவரிடமிருந்து இப்படியாகப் பறந்துசென்றது.
அந்த நேரத்தில்தான் ஏர்போர்ட்டிலிருந்து ஸாமுவேல் ஜாக்ஸன் வந்துகொண்டிருக்கிறார். ஸ்டுடியோவுக்குள் அவர் நுழைந்ததும் அங்கே அவரை வரவேற்ற ஒரு அதிகாரி, ‘மிஸ்டர் லாரன்ஸ் ஃபிஷ்போர்ன்.. உங்கள் நடிப்பு எனக்குப் பிடிக்கும்’ என்றே வரவேற்றதால் ஸாமுவேல் ஜாக்ஸனும் டென்ஷன் ஆனார். அப்போதுதான் ஆடிஷன் முடிந்து பால் கால்டெரோன் வெளியே வருகிறார். தடாலடியாக உள்ளே புகுந்த ஸாமுவேல் ஜாக்ஸனின் ஒரு கையில் ஒரு பர்கர். இன்னொரு கையில் ஒரு குளிர்பானம். உள்ளே இருந்த அனைவரையும் கொன்றுவிடுவது போல் முறைத்துக்கொண்டே, ’ Do you think you’re going to give this part to somebody else? I’m going to blow you motherfuckers away!’ என்று கடுப்பில் கோபமாக ஸாமுவேல் ஜாக்ஸன் பேச, அனைவருக்கும் ஜூல்ஸையே நேரில் பார்த்ததுபோல் இருந்ததால் ஏகமனதாக ஸாமுவேல் ஜாக்ஸனுக்கு அந்த வேடம் சென்றது. கூடவே பைபிளில் இருந்து படிக்கும் காட்சியில் மிகவும் உக்கிரமாகவும் நடித்திருந்தார் ஜாக்ஸன். பால் கால்டெரோன், பல்ப் ஃபிக்‌ஷனில் வில்லன் மார்ஸெல்லஸ் வாலஸின் bartendeராக ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.
618w_top_10_movie_ensembles_8
இதன்பின் பிற வேடங்களுக்கு அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
படப்பிடிப்பு துவங்குவத்ற்கு முன்னர் அனைவருக்கும் படத்தின் களத்தைப்பற்றிப் பயிற்சி கொடுக்கப்பட்டது. உமா தர்மனுக்கு ஹெராயின் உறிஞ்சுவதிலும் கொச்சையான வார்த்தைகள் பேசுவதிலும் பயிற்சி கொடுக்கப்பட்டது. ஹெராயின் அடிக்டாக இருந்த க்ரெய்க் ஹெமான் என்ற டாரண்டினோவின் நண்பர்தான் இந்தப் பயிற்சியைக் கொடுத்தவர். அதேபோல் ட்ரவோல்டா ஹெராயின் அடிக்ட்களை நெரில் பார்த்துப் பழகிப் பயிற்சி எடுத்துக்கொண்டார். பல்ப் ஃபிக்‌ஷன் பார்த்தவர்களுக்கு, ஒரு காட்சியில் ட்ரவோல்டா ஹெராயினை இஞ்செக்ட் செய்துகொள்வது தெரியும். அதில் அப்படியே கண்கள் சொருகிக்கொண்டு முகமெல்லாம் மலர்ந்து ஹெராயினை உட்செலுத்திக்கொண்டதுபோலவே ட்ரவோல்டா நடித்திருப்பார். அந்தக் காட்சிக்காக ட்ரவோல்டாவுக்குக் கிடைத்த டிப்ஸ் என்ன தெரியுமா? முடிந்தவரை டகீலாவை அருந்திவிட்டு இளஞ்சூடான தண்ணீர் இருக்கும் bathtubபில் அமிழ்ந்திருந்தால் அந்த எஃபக்ட் வந்துவிடும் என்பதே.
படப்பிடிப்பு துவங்கியது.
பி.கு
இங்கே ஒரு சிறிய விஷயம். இது திறந்த மனதுடன் திரைப்படங்களைப் பார்ப்பவர்களுக்கு அல்ல. மாறாக, இது யாருக்கு என்றால், அடுத்தவர்களின் கருத்தை ஏற்க மறுத்து, எதிலுமே இன்னொரு பக்கம் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளாமல் தான் பிடித்த முயலுக்கு மூணே கால் என்று செயல்படுபவர்களுக்கே. எனவே, என்னைப்போன்ற ஜாலியான திரை ரசிகர்கள் இதைப் படிக்கவேண்டாம். அலுக்கும்.
டாரண்டினோவைப் பற்றி எழுத ஆரம்பித்ததுமே சில நண்பர்களுக்கு குளிர் ஜுரம் வந்து கைகால் நடுங்கி விரல்கள் தந்தியடித்து, முடியெல்லாம் செங்குத்தாக நட்டுக்கொண்டு நிற்பதைக் காணமுடிகிறது. உலக சினிமா என்றால் என்ன? Literature of trash என்றால் என்ன? உலக இலக்கியத்தில் அதன் பங்கு எப்படிப்பட்டது? போன்ற எதுவுமே தெரியாத அந்த நண்பர்களின்மேல் பரிதாபமே எழுகிறது. Literature of Trash என்றால் என்ன என்று திரைப்படங்களில் தெரிந்துகொள்ளவேண்டும் என்றால் அவர்கள் அட்லீஸ்ட் அடிப்படை முயற்சியாக Serbian Film ஆவது பார்த்தால் நல்லது. இவர்களின் பிரச்னை என்ன என்றால், தங்களைத்தாங்களே உலக சினிமாவை உய்விக்க வந்த தூதுவர்கள் என்று எண்ணிக்கொண்டு அந்தக் கண்மூடித்தனமான ஈகோவினால் நல்ல படங்களைத் தவறவிட்டுவிடுகின்றனர். அவரது படங்களைக் கண்மூடித்தனமாக மறுத்து சிலர் எழுதுவதால் அவர்களுக்கு டாரண்டினோவின் அனுபவம் இல்லாமல் போகிறது. அதனால் அவர்களுக்கே நஷ்டம். இனியாவது திறந்த மனதுடன் அவர்கள் இந்தக் கட்டுரைகளைப் படித்து, நல்ல படங்களைப் பார்க்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன். உலகம் முழுக்க இந்தப் பிரச்னை இருக்கிறது. தீவிர வலதுசாரிகள் எப்போதும் இடதுசாரி சிந்தனையை மறுத்தே வந்திருக்கின்றனர். அதேபோல் ஒழுக்கமான மடி எழுத்தாளர்கள் Transgressive (சமுதாயத்தின் போலியான, கற்பிக்கப்பட்ட சிந்தனைமுறையை உடைப்பது) எழுத்தாளர்களை அவதூறாகப் பேசியே வந்திருக்கின்றனர். இப்படிப்பட்ட ஆட்களுக்கு ஆன்மா, உள்ளொளி என்றெல்லாம் பேசி, எழுதினால்தான் அது இலக்கியம். இலக்கியத்துக்கு இன்னொரு பக்கம் இருக்கிறது என்பதே இவர்களால் ஒப்புக்கொள்ளமுடிவதில்லை. செக்ஸோ வன்முறையோ வந்துவிட்டால் போதும்; இவர்களின் கூச்சல் சகிக்காது. ஆனால் இவர்களில் பலருமே குடும்பத்துடன் தொலைக்காட்சியில் குத்துப்பாடல்களையும் பார்ப்பவர்கள். இதுவேதான் உலக சினிமாவிலும். Pulp Fiction கான் பட விழாவில் உலக சினிமாவின் மரியாதைக்குரிய பாம் டோர் (பால்மே டி ஓர் – palme d’or அல்ல) விருதை வாங்கியிருக்கிறது. உலக சினிமாவில் புயல் போல் நுழைந்த படம் அது. அந்த விருதைக் கொடுத்தவர்களைவிட இப்படிப்பட்ட கண்மூடித்தனமான நபர்களுக்கு உலக சினிமா தெரிந்திருக்கும் என்று எண்ணத் தோன்றவில்லை.
டாரண்டினோவை யாரெல்லாம் எதிர்க்கிறார்கள் என்று உலக அளவில் கவனித்தால், பெரும்பாலும் இப்படிப்பட்ட போலிகளே அதிகம் என்பது தெரியும்.
எந்தக் கலைவடிவத்திலும் இரண்டு விதங்கள் உள்ளன. ஒன்று – பத்தியமான, மடியான, உயர்ஜாதிப் படைப்பு. இன்னொன்று அடிமட்ட நிலையில் இயங்கும் Transgressive படைப்பு. பெரும்பாலான முதல் வகை நபர்கள் இந்த இரண்டாம் வகையான படைப்பை அழித்தொழிக்கவே முயல்வார்கள். காரணம் அவர்களுக்கு the other என்ற, இன்னொன்று இருக்கக்கூடாது என்பதே எண்ணம். இவர்களின் கற்பிதங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக ட்ரான்ஸ்க்ரெஸிவ் எழுத்தில் உடைபடுவதை இவர்களால் தாங்க முடியாது. இவர்களுக்கு என் கோரிக்கை என்னவென்றால், நவீனகாலத்திய நல்ல படங்களை இனிமேலாவது பார்க்கக் கற்றுக்கொள்ளலாம் என்பதே. போலவே கண்மூடித்தனமான எதிர்ப்பால் என்ன நடக்கும் என்றால் இவர்களுக்கே ரத்தக்கொதிப்பு, பீப்பீ ஏகியவை எகிறி, உடல்நிலையைப் பாதிக்கும். எனவே, இவர்கள் டாரண்டினோவின் அனைத்துப் படங்களையும் இனிமேலாவது பார்த்து ரசித்து உய்ய என் வாழ்த்துகள்.

‘If I was like writing a movie, the day that I sit down to do it, whatever is going on with me at that time will find its way into the piece. It has to, or the piece isn’t worth making. All my movies are achingly personal’ – Quentin Tarantino.
Pulp Fiction திரைப்படத்தின் முதல் காட்சி, பம்ப்கின்னும் ஹனி பன்னியும் ரெஸ்டாரண்ட்டைக் கொள்ளையடிக்கத் திட்டமிடும் காட்சி. ரிஸர்வாயர் டாக்ஸ் படத்தைப் பார்த்துவிட்டு க்வெண்டினின் இரண்டாம் படத்துக்காகக் காத்திருக்கும் எந்த நபருக்கும் இந்தக் காட்சியைப் பார்த்ததுமே இது ஒரு டாரண்டினோ படம் என்று புரிந்துகொள்வதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. ரிஸர்வாயர் டாக்ஸின் முதல் காட்சியை நினைவுபடுத்தும் வகையிலேயே இந்தக் காட்சியும் அமைந்திருக்கும். அதிலும் ஒரு ரெஸ்டாரண்ட். இதிலும் ஒரு ரெஸ்டாரண்ட். அதில் ரெஸ்டாரண்ட்டில் அமர்ந்திருக்கும் கொள்ளைக்குழுவின் அங்கத்தினர்கள் கிட்டத்தட்ட உணவை முடித்தபின்னர் இயல்பாகப் பேசிக்கொள்ளும் காட்சி. இதிலும் கிட்டத்தட்ட உணவையும் காஃபியையும் முடிக்கும் தருவாயில் பம்ப்கின் ஹனிபன்னியிடம் தனது திட்டத்தை விவரிக்கும் காட்சி. அதில் ரெஸ்டாரண்ட்களில் வேலை செய்யும் சர்வர்களின் வாழ்க்கையையும், இவர்கள் வைக்கும் டிப்ஸ்கள் அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவுகின்றன என்பதைப் பற்றியும் பெரும்பாலான பேச்சு ஓடும். இதில் கடைகளின் முதலாளிகளையும் ரெஸ்டாரண்ட் முதலாளிகளையும் ஒப்பிடும்வகையில் பெரும்பாலான பேச்சு ஓடும். அதில் காட்சி முடியும்போது அட்டகாசமான Little Green Bag பாடலுடன் டைட்டில்கள் காண்பிக்கப்படும். இதில் காட்சி முடியும்போது ஃப்ரீஸ் ஆகி, Misirlou இசையுடன் டைட்டில்கள் ஓடும்.
இந்த Misirlou இசையின் பிரத்யேக அம்சம் என்னவென்றால், ‘The King of the Surf Guitar’ என்று அழைக்கப்பட்ட டிக் டேலினால் (Dick Tale) இசையமைக்கப்பட்ட ஒலிக்குறிப்பு இது.ஸர்ஃப் ம்யூஸிக் என்பது கடலில் Surfing செய்வதிலிருந்து வந்தது. அறுபதுகளில் மிகப்பிரபலமான இசைவடிவம். இதன் பிதாமகர்களில் ஒருவர்தான் டிக் டேல். ஸர்ஃப் இசையின் பிரதான அம்சம் – பெரும்பாலும் பாடுபவர் இல்லாமல் ஒரு கிதாரோ அல்லது ஸாக்ஸஃபோனோதான் இசையின் பிரதானமான விஷயமாக இருக்கும். டிக் டேல் இதில் பல்வேறு பரிசோதனைகளைச் செய்தவர். இசை வெளிப்பட்டு அதன் சிதறல்கள் ஓய்ந்து அடங்கும் வரையிலான (அலைகளைப் போன்ற) reverberationகளில் முடிந்தவரை பரிசோதனைகள் செய்வது டிக் டேலின் ஸ்பெஷாலிடி. இந்த வகையில், இந்த Misirlou பாடலைக் கிட்டத்தட்ட 95 முறைகள் பதிவு செய்ததாக அவர் குறிப்பிடுகிறார். 1962ல் வெளிவந்த இந்தப் பாடல் இன்றும் டிக் டேலின் பிரம்மாண்டமான ஹிட்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்தப் பாடலுடன் படத்தைத் துவங்கக் காரணம் என்ன?
‘இந்தப் பாடல் படத்தின் ஆரம்பத்தில் ஒலிக்க ஆரம்பித்ததுமே, படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கு இது ஒரு epic திரைப்படம் என்ற எண்ணம் உள்ளூற எழுந்துவிடுகிறது. இந்த இசையின் முக்கியத்துவம் அப்படி. அதுமட்டுமில்லாமல் என் படத்தை வருங்காலத்திலும் பலரது நினைவுகளில் தங்கியிருக்கச் செய்யும் திறமை இந்தப் பாடலுக்கு உண்டு என்று நினைக்கிறேன்’ என்பது டாரண்டினோவின் கருத்து.
இதோ Dick Taleன் Misirlou. இந்தப் பாடல், ஒரு பழைய middle east நாட்டுப்புறப் பாடலின் கிதார் வடிவமாகும்.
டைட்டிலின் பாதியிலேயே இந்தப் பாடல் டக்கென்று மாற்றப்பட்டு Jungle Boogie பாடல் ஒலிபரப்பப்படும். அது மாற்றப்படும் தருவாயில் ரேடியோவில் அலைவரிசை மாற்றப்படும் ஓசை வரும். அதுவும் ரிஸர்வாயர் டாக்ஸில் வருவதுதான். அந்தப் படத்தில் பின்னணியில் அவ்வப்போது இப்படிப்பட்ட ரேடியோ இசை அடிக்கடி வரும்.
இதன்பின் படம் துவங்கும்போது வின்ஸெண்ட்டும் ஜூல்ஸும் ஒரு காரில் சென்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி எந்த அறிமுகமும் இல்லை. அவர்களின் பேச்சில் டக்கென்று குறுக்கே நுழைகிறோம். அப்போது ஜூல்ஸ் வின்ஸெண்ட்டிடம் ஹேஷ் பார்களைப் பற்றிக் கேட்கிறான். ஐரோப்பாவின் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மூன்று வருடங்கள் கழித்து அப்போதுதான் வந்திருக்கிறான் வின்ஸெண்ட் என்பதால் அங்கே அவன் சென்ற கஞ்சா விற்கும் கடைகளைப் பற்றி ஜூல்ஸிடம் சொல்ல ஆரம்பிக்கிறான். ஆம்ஸ்டர்டாமுக்கும் அமெரிக்காவுக்குமான வித்தியாசங்கள், அங்கே அவனது அனுபவங்கள் என்று பேச்சு நீள்கிறது. இதுவரை படம் பார்த்துக்கொண்டிருக்கும் யாருக்கும் இந்த இருவர் யார் என்பதோ அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்பதோ எதுவும் தெரியாது. இந்தப் பேச்சின் இயல்புத்தன்மையிலும் நகைச்சுவையிலும் மயங்கி ஆடியன்ஸும் சிரிக்கத் துவங்கியிருப்பார்கள் (இப்போது மேலே பார்த்த Quoteட்டை நினைவுபடுத்திக்கொள்ளவும். இதெல்லாம் டாரண்டினோ பல்ப் ஃபிக்‌ஷன் திரைக்கதை எழுதும்போது ஆம்ஸ்ட்டர்டாமில் அனுபவித்தவை).
இந்தக் காட்சி முடிந்ததுமே வண்டியை நிறுத்தி, வண்டியின் பின்னால் இருந்து துப்பாக்கிகளை இருவரும் எடுத்துக்கொண்டு மேலே செல்லும்போதுதான் இருவரும் சரியான நபர்கள் இல்லை என்பதும் என்னமோ விபரீதம் நடக்கப்போகிறது என்பதும் ஆடியன்ஸுக்கு உறைக்க ஆரம்பித்திருக்கும். ஆனால் இதற்குள் ஆடியன்ஸ் வின்ஸெண்ட்டையும் ஜூல்ஸையும் பார்த்து சிரித்து, அவர்களின் கதாபாத்திரங்களை விரும்ப ஆரம்பித்தாயிற்று. இப்போது, இந்த இருவரும் செய்யும் குற்றங்களில் ஆடியன்ஸுக்கும் பங்குண்டு என்பதுதானே உண்மை? இதுதான் டாரண்டினோவின் ஸ்டைல். ஆடியன்ஸை எந்தக் காட்சியாக இருந்தாலும் உள்ளே இழுத்துவிட்டு ஒரு எதிர்பாராத தருணத்தில் அவர்களின் கன்னத்தில் அறைவது. இதையேதான் ஏற்கெனவே நாம் பார்த்த Reservoir Dogs படத்தின் காதை அறுக்கும் சித்ரவதைக் காட்சியிலும் க்வெண்டின் அமைத்திருப்பார்.
இதற்குப்பின்னர்தான் படத்தின் மிகப்பிரபலமான காட்சி வருகிறது. பர்கர் ஸீன் என்றே அழைக்கப்படும் இந்தக் காட்சியில், க்வெண்டினே பிரத்யேகமாக எழுதிய (Ezekiel 25:17 – The path of the Righteous man) பைபிள் வாசகங்களைப் பேசியவாறு ஜூல்ஸின் கதாபாத்திரம் அந்த அறையில் இருப்பவர்களை சுட்டுக்கொல்லும்.
இதன்பின்னர் Vincent Vega & Marsellus Wallace’s Wife என்ற அத்தியாயம் ஆரம்பிக்கிறது.
நேரடியாக ப்ரூஸ் வில்லிஸின் மண்டையில் ஆரம்பிக்கும் காட்சியில், ப்ரூஸ் வில்லிஸின் புட்ச் கதாபாத்திரம் யாரோ ஒரு ஆள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கிறது (பின்னணியில் ஓடுவது Let’s Stay Together – Al Greenன் பாடல்). மிக நீளமாக ஓடும் அந்த வசனம் மூலம் ஒரு பாக்ஸிங் பந்தயத்தில் ஐந்தாவது ரவுண்டில் புட்ச் தோற்கவேண்டும் என்று அந்தக் கதாபாத்திரம் சொல்கிறது. அதற்கு முன்னரே அந்த உருவம் புட்ச்சுக்குப் பணமும் கொடுக்கிறது. அப்போது அந்த உருவத்தின் பின்னந்தலை (அதில் இருக்கும் ப்ளாஸ்திரியோடு) தெரிகிறது. அப்போதுதான் உள்ளே ஜூல்ஸும் வின்ஸெண்ட்டும் மிகவும் நகைச்சுவையான உடைகளை அணிந்துகொண்டு வருகிறார்கள். அங்கே புட்ச்சுக்கும் வின்ஸெண்ட்டுக்கும் பிரச்னை உருவாகிறது. இருவரும் ஒருவரையொருவர் முறைத்துக்கொள்கிறார்கள். அதுதான் இருவரும் வரும் வேறொரு காட்சிக்கான ஆரம்பம்.
இந்தக் காட்சி முடிந்ததும் வின்ஸெண்ட் அவனது நண்பனிடம் கோக்கெய்ன் வாங்கும் காட்சி. இந்தக் காட்சியில் வரும் ரோஸானா ஆர்க்வெட்டின் Fellatio வசனம் புகழ்பெற்றது. உடல் முழுதும் piercing செய்துகொண்டிருக்கும் ஆர்க்வெட், தனது க்ளிட்டில் உள்ள piercing எதற்கு என்று சொல்லும் காட்சி (பின்னணியில் Bustin’ Surfboards பாடல்).
இந்தக் காட்சிக்குப் பிறகுதான் படத்தில் எனக்கு மிகப்பிடித்த சீக்வென்ஸ் துவங்குகிறது. வின்ஸெண்ட், மார்ஸெலஸ் வாலஸின் மனைவி மியாவை ரெஸ்டாரண்ட் அழைத்துச்செல்லும் சீக்வென்ஸ். இதில் பல நகைச்சுவையான விஷயங்கள் உண்டு. Black comedyயும் உண்டு. எல்லாவற்றுக்கும் சிகரமாக, ஜான் ட்ரவோல்டாவின் நடனம் இதில்தான் வருகிறது.
ஜான் ட்ரவோல்டாவின் Saturday Night Fever பற்றி எல்லாத் திரைப்பட ரசிகர்களுக்கும் தெரிந்திருக்கும். எழுபதுகளின் முடிவில் ஒரு மிகப்பெரிய இளம் சூப்பர்ஸ்டாராக ஜான் ட்ரவோல்டாவை ஆக்கிய படம். உடனேயே Crease படமும் வெளிவந்து பிய்த்துக்கொண்டு ஓடியதால் இளம்பெண்கள் ஆர்கஸத்தில் திளைக்கும்போது நினைக்கும் நபராக ஜான் ட்ரவோல்டா ஆனார். தனது 24ம் வயதில் புகழின் உச்சத்தில் இப்படி ஒரு நடிகர் இருப்பதை நினைத்துப்பாருங்கள். இந்த இரண்டு படங்களுமே ஜான் ட்ரவோல்டாவின் நடன ஆற்றலை அட்டகாசமாகக் கொணர்ந்த படங்கள். இதன்பின்னர் வெளிவந்த சில தோல்விப்படங்களால் ட்ரவோல்டா ஒரு தோல்வியுற்ற நடிகராக ஆகி, எப்போதாவது சில படங்களில் தலைகாட்டிவந்த காலம் அது. இதைப்பற்றிச் சென்ற கட்டுரையில் பார்த்திருக்கிறோம். பிடிவாதமாக வின்ஸெண்ட்டின் பாத்திரத்துக்கு டாரண்டினோ ட்ரவோல்டாவைத்தான் நடிக்கவைக்க விரும்பினார் என்றும் கவனித்தோம்.
இந்த ரெஸ்டாரண்ட் காட்சியில்தான் மியாவை முதன்முதலில் நம் கவனிக்கப்போகிறோம். அதுவரை மியா எப்படிப்பட்ட பாத்திரம் என்றே நமக்குத் தெரியாது. இந்தக் காட்சியின் வசனங்களில் இரண்டு பேரின் கதாபாத்திரங்களையும் அழகாகக் காட்டியிருப்பார் டாரண்டினோ. இருவரும் உணவை ஆர்டர் செய்வதில் இருந்து (வின்ஸெண்ட்டின் தேர்வு – Douglas Sirk Steak – bloody as hell மற்றும் Vanilla Coke. மியா தேர்வு செய்வதோ Durward Kirby Burger – bloody as hell மற்றும் a 5 dollar shake). இந்த ஐந்து டாலர் ஷேக்கைப் பற்றியே இதன்பின் சுவாரஸ்யமான வசனம் உண்டு. இதன்பின் தான் இருவரும் மெல்லமெல்லப் பேச ஆரம்பிக்கிறார்கள். அப்போது மியாவின் சுவாரஸ்யமான டிவி பைலட் எபிஸோடின் கதை வருகிறது (மியா சொல்லும் இந்தக் கதையைக் கவனித்தவர்களுக்கு, இந்தக் கதைதான் டாரண்டினோ பின்னால் எடுத்த கில் பில்லின் சுருக்கம் என்பது புரியும். எப்படி? வசனத்தைக் கவனியுங்கள்). இதன்பின் மார்ஸெலஸ் வாலஸ், டோனி ராக்கி ஹாரர் என்று அழைக்கப்பட்ட நபரை மாடியில் இருந்து தூக்கி எறிந்ததைப் பற்றி வின்ஸெண்ட் கேட்கும் வசனம்.
அப்போதுதான் அறிவிப்பாளர் அங்கு நடக்கும் நடனப் போட்டியைப் பற்றி அறிவிக்கிறார். ஏற்கெனவே மரியுவானாவின் பாதிப்பில் இருக்கும் மியா, உடனடியாக அதில் கலந்துகொள்ள வின்ஸெண்ட்டையும் அழைத்துக்கொண்டு செல்கிறாள்.
அப்போது ஒலிக்கும் பாடல்தான் You Never can Tell. சக் பெர்ரி (Chuck Berry)யின் மிகமிகப் பிரபலமான பாடல்களில் ஒன்று. Chuck Berry, அமெரிக்காவின் ராக் & ரோல் பிதாமகர்களில் ஒருவர். ஐம்பதுகளில் இறுதியில் அவர் உருவாக்கிய பாடல்தான் இது. இந்தப் பாடலின் விசேஷம் – பாடல் உருவாக்கப்பட்டபோது சக் பெர்ரி சிறையில் இருந்தார். காரணம், Mann Act என்ற ஒரு குறிப்பிட்ட சட்டத்தை அவர் மீறியதே. அந்த சட்டம் விபசாரத் தடுப்புச் சட்டங்களில் ஒன்று. பெண்களை ஓரிடத்தில் இருந்து விபசாரத்துக்காக வேறோரிடத்துக்குக் கொண்டு செல்வதைத் தடுக்கும் சட்டம் இது. மெஹிகோவில் (Mexico) அவரைக் கவர்ந்திருந்த ஜேனிஸ் நோரீன் எஸ்கலாண்ட்டி என்ற 14 வயதுப் பெண்ணுக்கு சக் பெர்ரியின் ஸெய்ண்ட் லூயிஸ் நைட் க்ளப்பில் வேலை கொடுத்தார். ஆனால் அதன்பின் அந்தப் பெண் வேலையை விட்டு நீக்கப்பட்டார். அந்தப் பெண் கொடுத்த புகாரின் பெயரில் சக் பெர்ரி கைது செய்யப்பட்டார். அந்தச் சமயத்தில் ராக் & ரோல் இசை முழுவீச்சை அடைந்திருந்த காலம். அதை உருவாக்கியவர்களில் சக் பெர்ரியும் ஒருவர். புகழின் உச்சம். அப்படி சிறையில் இருந்தபோதுதான் இந்தப் பாடலை சக் பெர்ரி உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது. 1964ல் வெளியானது. அமெரிக்க folk இசையையும் western இசையையும் கலந்து உருவாக்கப்பட்ட Rockabilly வகையான பாடல் இது.
இந்தப் பாடலைக் கடந்த சில மாதங்களில் நூற்றுக்கணக்கான முறைகள் கேட்டிருக்கிறேன். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. உற்சாகம் தொற்றிக்கொள்ளும். நீங்களும் கேட்டுப்பாருங்கள்.
பாடல் துவங்கும்போது அறிவிப்பாளர் அழைத்ததும் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் மியாவைக் கவனியுங்கள். அவள் மரியுவானாவின் பாதிப்பில் இருக்கிறாள் (வின்ஸெண்ட்டும் கோக்கெய்ன் செலுத்திக்கொண்டிருந்திருக்கிறான்). எனவே எந்தத் தடைகளும் இல்லாமல் இயல்பாகவும் குறும்பாகவும் எல்விஸ் ப்ரஸ்லியின் பாணியில் மைக்கை சாய்த்துத் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறாள். பின்னர் வின்ஸெண்ட்டின் பெயரைச் சொல்கையில் குரலையும் எல்விஸ் போலவே மாற்றிச் சொல்கிறாள். பாடல் தொடங்குமுன்னர் ஜான் ட்ரவோல்டாவின் மிக மெதுவான ஷூ கழற்றிவைக்கும் காட்சி. பாடலுக்கான எதிர்பார்ப்பு இது. சக் பெர்ரியின் அட்டகாசமான பாடல் இப்படியாகத் துவங்குகிறது.
பாடலை முதன்முதலில் திரையரங்கில் பார்த்தவர்கள் அவசியம் புல்லரித்துப் போயிருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஜான் ட்ரவோல்டாவின் கடந்தகாலம் அப்படிப்பட்டது. ஒரு உதாரணமாக, ரஜினியோ கமலோ பத்து வருடங்களாகப் படமே இல்லாமல், திடீரென்று அட்டகாசமான ஒரு சூப்பர்ஹிட்டில் நடிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில் ரஜினி/கமலின் அறிமுகக் காட்சியைப் பார்க்கும் ரசிகர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? அதே உணர்வுகள்தான் இந்தப் பாடலில் ஜான் ட்ரவோல்டா ஆடுவதைப் பார்க்கும் ரசிகர்களுக்கும் இருந்தது. அதிலும் அந்தப் பாடல் எப்படிப்பட்டது? ராக் & ரோலின் சூப்பர்ஹிட் பாடல்களில் ஒன்று. அந்த நேரத்தின் உணர்வுகள் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
இந்தப் பாடல் படமாக்கப்பட்டபோது உமா தர்மனுக்குப் பயம். ட்ரவோல்டாவுடன் எப்படி ஆடுவது? ஆனால் ட்ரவோல்டா ஒவ்வொரு ஸ்டெப்பாக உமாவுக்குக் கற்றுக்கொடுத்தார். கூடவே, பாடல் படமாக்கப்பட்டபோது அந்த மேடையைச் சுற்றிச்சுற்றி உற்சாகமாகத் துள்ளிக்குதித்தபடி டாரண்டினோ வர, அவர் ஒவ்வொரு நடன வகையின் பெயரையும் சொல்லிக் கத்த, உடனடியாக அந்த நடனத்தை மாற்றி ஆடினார் ட்ரவோல்டா. எல்லாமே ஆன் த ஸ்பாட். அந்த நடனப் போட்டியே Twist பற்றித்தான். ஜான் ட்ரவோல்டாவோ Twistட்டில் அடித்துக்கொள்ளமுடியாத ஆள். அவரது எட்டாவது வயதில் முதன்முறையாக ஒரு ட்விஸ்ட் நடனப் போட்டியில் முதல் பரிசு வாங்கியவர். எனவே, இந்தக் காட்சி ஆரம்பிக்குமுன்னர் ட்ரவோல்டாவை அழைத்த டாரண்டினோ, ‘ட்விஸ்ட்டில் உங்கள் திறமை எனக்குத் தெரியும்; ஆனால் இதில் க்ளாஸிக் ட்விஸ்ட் மட்டும் இல்லாமல், தற்போது பிரபலமாகி வரும் இன்னும் சில புதிய வகைகளையும் ஆடினால் நன்றாக இருக்கும்’ என்று சொல்கிறார். அப்போது ட்ரவோல்டா, ‘உங்களுக்கு என்ன வேண்டுமோ அவற்றை அவ்வப்போது கத்துங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று பதில் கொடுக்கிறார்.
அன்றைய தினம் அந்த அரங்கே விழாக்கோலம் கொண்டிருந்தது. ஜான் ட்ரவோல்டா ஆடுவதைப் பார்க்க அந்தப் படப்பிடிப்புக் குழுவினர் அனைவரும் தயார். காட்சி துவங்குமுன் உமாவுக்கு ட்விஸ்ட்டின் மூவ்களைக் கற்றுக்கொடுக்கிறார் ட்ரவோல்டா. அதன்பின்னர் காட்சி துவங்குகிறது. டாரண்டினோ படுபயங்கர உற்சாகத்துடன் மேடையைச் சுற்றி ஒரு குழந்தையைப் போல் துள்ளிக் குதித்தவாறு, ‘Watusi!!!’, ‘Hitchhiker!!!’, ‘Batman!!!’ என்றெல்லாம் ட்விஸ்ட்டின் வகைகளைச் சொல்லிச்சொல்லிக் கத்த, உடனடியாக அதற்கு ஏற்றவாறு ட்ரவோல்டா அனாயாசமாகத் தன்னை மாற்றிக்கொண்டு ஆடுவதை வீடியோவில் பார்க்கலாம்.

இப்படியாக இந்தப் படத்தின் மறக்கமுடியாத காட்சிகளில் ஒன்றாக ஆனது இந்த நடனப்போட்டி.
நடனப் போட்டியில் வென்றபின் மியாவும் வின்ஸெண்ட்டும் வீடு வருகிறார்கள். இருவருமே போதை மருந்தின் பிடியில்தான் இருக்கிறார்கள். அப்போது மியா இருவரும் மது அருந்தலாம் என்று சொல்கிறாள். வின்ஸெண்ட் கழிவறைக்குச் செல்கிறான். மியா ஒரு பாடலை அங்கிருக்கும் ப்ளேயரில் போடுகிறாள். அதுதான் ’Girl.. You will be a woman soon’. இந்தப் பாடல் ஒரிஜினலாக Neil Diamond 1967ல் பாடியது. இதனை ஒரு cover versionஆக Urge Overkill 1992l செய்திருந்தனர். கவர் வெர்ஷன் என்றால், ஏற்கெனவே ஒருவர் பாடியிருக்கும் பாடலை எடுத்துக்கொண்டு மறுபடியும் இசையமைத்துக் கொண்டுவருவது. நீல் டயமண்டை இசை ரசிகர்கள் மறக்க முடியாது. மிகப் பிரபலமான நபர். இருந்தாலும், இப்போது இந்தப் பாடலைச் சொன்னால் அர்ஜ் ஓவர்கில்தான் பலருக்கும் நினைவு வருமளவு இன்னும் இந்தப் பாடல் பிரபலம். படத்தில் கச்சிதமாக வைக்கப்பட்டதுதான் காரணம்.
முதலில் இந்தக் காட்சிக்கான பாடலை யோசிக்கையில் இந்தப் பாடல் டாரண்டினோவின் மூளையிலேயே இல்லை. வேறு பல பாடல்கள் கேட்டு யோசித்துக்கொண்டிருக்கும்போது சட்டென்று அவருக்குத் தோன்றிய பாடல் இது. இந்தப் பாடலைப் பற்றி, ‘நீல் டயமண்டின் ஒரிஜினலைவிடவும் நன்றாக இசையமைக்கப்பட்டிருக்கும் பாடல்’ என்று டாரண்டினோ சொல்லியிருக்கிறார்.
இந்தப் பாடலுக்கு மியா வெளியே நடனமாடிக்கொண்டிருக்கும்போது உள்ளே வின்ஸெண்ட், அங்கிருந்து நேராக வீட்டுக்குச் சென்றுவிடுவதுதான் உத்தமம் என்று தனக்குத்தானே பேசிக்கொண்டிருப்பதைக் காணலாம். மியாவுடன் ஏதேனும் கசமுசா ஆகிவிட்டால் அவன் பாஸ் மார்ஸெலஸ் வாலஸால் கைவேறு கால்வேறாக வின்ஸெண்ட் பிய்க்கப்படுவது உறுதி. அப்போதுதான் விதிவசத்தால் அவர்கள் ரெஸ்டாரண்ட் செல்வதற்கு முன்னர் வின்ஸெண்ட் வாங்கிவந்த ஹெராயின் மியாவின் கையில் கிடைக்கிறது. அவள் அதனைக் கோக்கெய்ன் என்று நினைத்து மூக்கால் உறிஞ்சி, OD ஆகி மயக்கம் அடைந்துவிடுகிறாள். இது வின்ஸெண்ட்டுக்குத் தெரியாது. ஒருவழியாக, ஐம்புலன்களையும் அடக்கிக்கொண்டு வெளியே வரும் வின்ஸெண்ட்டின் reaction விலைமதிப்பற்றது (திரைக்கதையில் இந்த இடத்தில் இன்னும் ஓரிரண்டு வரிகள் வசனம் வரும். அது படத்தில் இல்லை).
மியாவைக் கிட்டத்தட்ட செத்தேவிட்ட நிலையில் பார்க்கும் வின்ஸெண்ட், அவனது வாழ்க்கை மார்ஸெலஸ் வாலஸின் கைகளால் நொறுக்கப்படப்போவதை உணர்கிறான். உச்சபட்சப் பரபரப்பில் அவளைத் தூக்கிக் காரில் போட்டுக்கொண்டு, ஹெராயினை வாங்கிய நண்பன் லான்ஸின் வீட்டுக்குப் புயல் வேகத்தில் பறக்கிறான். லான்ஸுக்கு ஃபோன் செய்கிறான். லான்ஸோ ஃபோன் பேசும் நிலையில் இல்லை. விடாப்பிடியாக அவனைப் பிடிக்கும் வின்ஸெண்ட், மியாவை அவனது வீட்டில் கொண்டுவந்து கிடத்துகிறான்.
பொதுவாக இப்படி ஒரு காட்சி எந்தப் படத்தில் வந்தாலும் அது மிகவும் சீரியஸான காட்சியாகத்தான் இருக்கும். எழுதும்போதே அப்படித்தான் எழுதத் தோன்றும். ஆனால் இதை வயிறு வெடித்துச் சிரிக்கவைக்கும் ஒரு காட்சியாக டாரண்டினோ எழுதியிருப்பார் (‘You’re supposed to laugh until I stop you laughing’ – QT). இதுபோல் ஆடியன்ஸை அவர்கள் எதிர்பார்க்கும் உணர்ச்சி இல்லாமல் முற்றிலும் வேறான உணர்ச்சியால் திசைதிருப்புவது டாரண்டினோவின் வழக்கம் என்பதை ரிஸர்வாயர் டாக்ஸ் படத்தின் காதை வெட்டும் காட்சியிலேயேபார்த்தோம். முதலிலிருந்து இறுதிவரை சிரித்துக்கொண்டே இருக்கவைக்கும் அந்தக் காட்சி இங்கே. இதில் வரும் வசனங்களையும், அவை பேசப்படும் தருணங்களையும் கவனியுங்கள். ப்ளாக் ஹ்யூமர் என்ற நகைச்சுவை வகைக்கு – உயிராபத்தான தருணங்களில் முட்டாள்தனமாக நடந்துகொண்டு ஆடியன்ஸைத் தங்களையறியாமல் சிரிக்க வைப்பது – மிக அட்டகாசமான உதாரணம் இந்தக் காட்சி என்பது விளங்கும்.
இந்தக் காட்சியை வின்ஸெண்ட் லான்ஸின் வீட்டுக்கு வருவதற்காக அவனைத் தொலைபேசியில் அழைக்கும் காட்சியில் இருந்து பார்த்தால்தான் இந்த டார்க் ஹ்யூமர் நன்றாகப் புரியும். கூடவே லான்ஸும் அவனது மனைவி ஜோடியும் பேசிக்கொள்வது, ஜோடி லான்ஸையும் வின்ஸெண்ட்டையும் பார்த்து எரிச்சல் அடைவது, வின்ஸெண்ட்டும் லான்ஸும் மியாவைப் பற்றிப் பேசுவது ஆகிய எல்லாவற்றையும் கவனித்துப் பாருங்கள். சிரிப்பை அடக்குவது கடினம் என்று புரியும்.
இந்தக் காட்சிக்குப் பிறகு மியாவை வீட்டில் கொண்டுவந்து விடுகிறான் வின்ஸெண்ட். பயத்தில் பேசவே முடியாத நிலையில் இருக்கிறான். அந்தக் காட்சி முடியும்போது மியா ஏற்கெனவே அவனிடம் சொல்லாமல் விட்ட ஒரு ஜோக்கைச் சொல்வாள். அதற்கு சுத்தமாக முடியாத நிலையில் மெலிதாக சிரித்துவிட்டு, மியா உள்ளே செல்கையில் ஒரு ஃப்ளையிங் கிஸ்ஸை அடித்துவிட்டு வின்ஸெண்ட் செல்வான்.
இதன்பின் தான் புட்ச்சின் அத்தியாயம் துவக்கம். The Gold Watch என்ற பெரிய அத்தியாயத்தின் மூலம் புட்ச் பாக்ஸிங் போட்டியில் வெல்வதையும், இதனால் மார்ஸெலஸ் வாலஸ் கடுப்பாகி புட்ச்சைத் தேடுவதையும், பின்னர் புட்ச்சின் காதலி, அவனது வீட்டிலேயே அவன் தந்தை அளித்த தங்கக் கடிகாரத்தை மறந்து வைத்துவிடுவதையும், இதனால் ஆத்திரமடையும் புட்ச் தானே அங்கு சென்று, எதேச்சையாக அங்கிருக்கும் வின்ஸெண்ட்டைக் கொல்வதையும், வெளிவரும்போது அவனை மார்ஸெலஸ் வாலஸ் பார்த்துவிட்டுத் துரத்துவதையும், இருவரும் மேய்னார்ட் என்ற கடைக்காரன் ஒருவனால் கட்டிப்போடப்பட்டு, அவனது பார்ட்னர் ஸெட் என்னும் போலீஸ்காரன் வந்ததும் முதலில் மார்ஸெலஸ் வாலஸ் அவர்களால் Sodomyக்குள்ளாக்கப்படுவதையும், அப்போது புட்ச் மேய்னார்டை ஒரு சாமுராய் கத்தியால் கொன்று மார்ஸெலஸைக் காப்பாற்றுவதால் அவனை ஊரை விட்டே ஓடச்சொல்லும் மார்ஸெலஸ் ஸெட்டைக் கொல்ல ஆரம்பிப்பதையும் இந்த அத்தியாயம் சொல்கிறது.  இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் வரும் புகழ்பெற்ற நான்கு பக்க வசனம் மிகவும் நகைச்சுவையானது. க்ரிஸ்டோஃபர் வா(ல்)க்கன் பேசுவது.
இந்த அத்தியாயத்தின் விசேஷம் என்ன தெரியுமா? மேய்னார்டின் கடைக்குள் புட்ச் வருகையில் அந்தக் கடையில் பல்வேறு சமாச்சாரங்கள் அடுக்கப்பட்டிருக்கும். பின்னர் புட்ச் அங்கிருந்து தப்பிக்கையில் ஒவ்வொரு ஆயுதமாக எடுத்துப் பார்ப்பான். அவையெல்லாமே டாரண்டினோவுக்கு மிகப் பிடித்தமானவை. பின்னால் கில் பில்லில் முக்கியப் பங்கு வகிக்கப்போகும் ஸாமுராய் கத்தியும் அவற்றில் ஒன்று. அந்தக் கத்தியால்தான் மேய்னார்டை புட்ச் கொல்வான் (ஏற்கனவே பார்த்த ரெஸ்டாரண்ட் காட்சியில் மியா விவரிக்கும் அவளது தொலைக்காட்சித் தொடரின் கதைதான் கில்பில் என்பதைச் சென்ற அத்தியாயத்தில் பார்த்துவிட்டோம்).
இதிலும் டார்க் ஹ்யூமர் இல்லாமலில்லை. எல்லோராலும் பயத்துடன் பார்க்கப்படும் மார்ஸெலஸ் வாலஸை ஒரு சாதாரணக் கடைக்காரன் ஸோடோமைஸ் செய்வது அப்படிப்பட்டதே. போலவே அதில் மார்ஸெலஸ் வாலஸாக நடித்திருக்கும் விங் ரேம்ஸின் முக்கல் முனகல்களைக் கேட்டாலே சிரிப்பு வரும். அந்தக் காட்சி முடிந்ததும் மார்ஸெலஸும் புட்ச்சும் பேசிக்கொள்ளும் காட்சியில் விங் ரேம்ஸ் அனாயாசமாக நடித்திருப்பார். அவரது ‘I am going medieval on his ass’ வசனம் புகழ்பெற்றது. போலவே ‘Oh that now what’ என்று சொல்லி அவர் பேசும் வசனமும். இதோ இந்த வீடியோவில் மார்ஸெலஸின் வசனங்கள் தெளிவாகக் காட்டப்பட்டிருக்கின்றன. அவற்றைப் படித்துப் பாருங்கள். பின்னால் பான்னி சிச்சுவேஷன் அத்தியாயத்தில் அறிமுகமாகப்போகும் மிஸ்டர் வுல்ஃப் கதாபாத்திரம் இப்போதே வசனங்களின் மூலம் ஆடியன்ஸுக்குக் காட்டப்பட்டுவிடும். புட்ச்சிடம் பேசிய மார்ஸெலஸ் ஃபோனில் வுல்ஃபை அழைப்பான். ‘Hello Mr. Wolf. It’s Marsellus. Gotta bit of a situation’ என்று அவரிடம் மார்ஸெலஸ் பேசுவதைக் கேட்கலாம் (இது வேற்றுமொழியில் இருந்தாலும், வசனங்கள் இங்கே ஹைலைட் செய்யப்படுவதுதான் முக்கியம்).
இதில் Gimp என்று அழைக்கப்படும் ஒரு அடிமையை வேறு மேய்னார்டும் ஸெட்டும் அடைத்து வைத்திருப்பார்கள். இவர்கள் ஸோடோமைஸ் செய்வதை அவனுக்கு முன்னால் அரங்கேற்றுவார்கள். அப்படி ஸோடோமைஸ் செய்யும் இடம்: Russel’s Old Room. ஆனால் ரஸ்ஸல் யார் என்பது படத்தில் இருக்காது. ’ரஸ்ஸலின் பழைய அறை’ என்றதுமே ரஸ்ஸல் என்ற மனிதன், அவன் உபயோகப்படுத்திய அறை என்றெல்லாம் மனம் யோசிக்க ஆரம்பித்துவிடுகிறதுதானே? அதுதான் அந்தப் பெயரில் உள்ள சூட்சுமம். இதுவும் ஒரு திரைக்கதை நுணுக்கம்தான். உயிரற்ற பொருட்களில் உயிருள்ள மனிதர்களை உலவ விடுவது. இதன்மூலம் காட்சியின் இயல்புத்தன்மை அதிகரிக்கும்.
ஒன்றை யோசித்தால், பல்ப் ஃபிக்‌ஷனில் எல்லாக் காட்சிகளுமே எப்போதுமே இரண்டு மனிதர்களுக்குள்ளாகத்தான் நடக்கின்றன. துவக்கத்தில் பம்ப்கினும் ஹனிபன்னியும்; பின்னர் வின்ஸெண்ட்டும் ஜூல்ஸும்; அடுத்து வின்ஸெண்ட்டும் மியாவும்; இதன்பின் புட்ச்சும் அவன் காதலி ஃபேபியனும்; இதன்பின்னர் என்ன நடக்கிறது என்று பார்த்தால் புட்ச் தனியாக மாட்டிக்கொள்கிறான்; முதலில் வின்ஸெண்ட்டைக் கொல்கிறான். பின்னர் ஸோடோமைஸ் செய்யும் மேய்னார்டிடமும் ஸெட்டிடமும் (இங்கும் இரண்டு பேர்) மாட்டிக்கொள்கிறான். எப்போது அவன் அங்கிருந்து தப்பிக்கிறான் என்றால், இன்னொரு இணையுடன் சேரும்போதுதான் (மார்ஸெலஸ்). இதுதான் பல்ப் ஃபிக்‌ஷனின் மையக்கருத்து என்பது டாரண்டினோவின் வாய்மொழி. இந்தப் படத்தில் ஒரு டீமாக இருக்கும்போதுதான் அனைவருக்கும் அனைத்தும் நடக்கிறது.
அதேபோல் மார்ஸெலஸை மேய்னார்டும் ஸெட்டும் ஸோடோமைஸ் செய்யும் காட்சியில் ஒரு அசத்தலான இசை வரும். அதன்பெயர் – Comanche. இந்தப் பாடல், The Revels என்ற ராக் குழுவினருடையது. பாடல் உருவான வருடம் 1961. ஏன் இந்தப் பாடல்? உண்மையைச் சொன்னால், இந்தக் காட்சியில், மார்ஸெலஸைக் குனியவைத்து ஸோடோமைஸ் செய்யும்போது அந்த ரிதத்துக்கு இணையாக ரிதம் இருக்கும் பாடல் ஒன்றையே டாரண்டினோ தேடினார். அப்படி அவர் முடிவுசெய்தது – The Knack என்ற குழுவின் My Sharona என்ற பாடல். அதைக் கீழே பார்க்கலாம். அதன் ரிதத்தை கவனியுங்கள். ஒரேபோன்ற ட்ரம்ஸ் இசை, ஸோடோமைஸ் செய்வதற்குச் சரியான ரிதமாக இருக்கும்.
ஆனால் அந்தக் குழுவில் ஒரு நபர், போயும் போயும் ஸோடோமைஸ் செய்யும் காட்சி ஒன்றுக்கு எங்கள் பாடலைக் கொடுப்பதா என்று மறுத்ததால், அந்தப் பாடல் டாரண்டினோவை விட்டுப் போயிற்று. மாறாக Reality Bites படத்தில் அந்தப் பாடல் உபயோகப்பட்டது. அப்போது டாரண்டினோவின் மனதில் உதித்ததுதான் Comanche பாடல். My Sharona பாடலை விடவும் அட்டகாசமான ரிதத்தோடு மார்ஸெலஸ் வாலஸ் ஸோடோமைஸ் செய்யப்படும் காட்சிக்குக் கனகச்சிதமாகப் பொருந்தியது.
இந்தக் காட்சி முடிந்தபின்னர்தான் படத்திலேயே எனக்கு மிகப்பிடித்த அத்தியாயம் – The Bonnie Situation – வருகிறது

தொண்ணூறுகளின் ensemble படங்களில் action காட்சிகள் மிகவும் முக்கியம் என்று கருதப்பட்டுவந்த காலத்தில், ஹார்வி கைடெல், ஜான் ட்ரவோல்டா, ஸாமுவேல் ஜாக்ஸன் போன்றோர் இருந்தபோதும் முழுக்க முழுக்க வசனங்களாலேயே நகர்த்தப்படும் ஒரு முழு அத்தியாயமும் எழுதக்கூடிய துணிச்சல் டாரண்டினோவிடம்தான் இருந்தது. அதுதான் The Bonnie Situation. படத்தின் ஜாலியான அத்தியாயங்களில் ஒன்று. இந்த அத்தியாயத்தில் வரும் ஜிம்மி என்ற கதாபாத்திரத்தில் டாரண்டினோவே நடித்தார். உண்மையில் இதற்கு முந்தைய காட்சி ஒன்றில் மியாவுக்கு அட்ரினலின் ஊசி போடும் காட்சியில் வரும் லான்ஸ் என்ற கதாபாத்திரத்தைத்தான் டாரண்டினோ முதலில் தேர்வு செய்திருந்தார். ஆனால் படத்தின் மிக முக்கியமான காட்சிகளில் அது ஒன்று என்பதால் அப்போது கேமராவின் பின்னால் இருந்து இயக்குவதுதான் நல்லது என்று இறுதியில் முடிவுசெய்து, படத்தில் பின்னர் வரக்கூடிய ஜிம்மி கதாபாத்திரத்தில் நடிக்க முடிவுசெய்தார். அந்தக் காட்சிகளில் வரும் ‘Wolf’ பாத்திரம், ஹார்வி கைடெலையே மனதில் வைத்து எழுதப்பட்டதுதான். இந்த அத்தியாயத்தின் ஒரிஜினல் பெயர் – Jules, Vincent, Jimmie and The Wolf. பின்னர் அது பான்னி சிச்சுவேஷன் என்று மாற்றப்பட்டது.
கதைப்படி வின்ஸ்டன் வுல்ஃப் என்பவர் தாதா மார்ஸெலஸின் நண்பர். எந்தப் பிரச்னை நடந்தாலும் அதைத் தீர்த்துவைப்பவர். படத்தில் ஏற்கெனவே ஒருமுறை அவரது பெயர் வருவதுபற்றி Pulp Fiction வெறியர்களுக்குத் தெரிந்திருக்கலாம் (எங்க்கே வரும் என்பதை கமெண்ட்டில் சொல்லலாம்). இந்தக் கதாபாத்திரத்துக்கு இப்பெயரை டாரண்டினோ வைத்ததுபற்றி ஹாலிவுட்டில் ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு. என்னவென்றால், 1993ல் ஸ்டார் வார்ஸ் படத்தைப்பற்றிய ஒரு கேமை லூகாஸ் ஃபில்ம் நிறுவனத்தார் உருவாக்கிக்கொண்டிருந்தனர். அப்போது அதில் வேலை செய்த ஒரு ப்ரோக்ராமர் பெயர் வின்ஸ்டன் வுஃல்ப். அந்தக் குழுவிலேயே இருந்த மிகவும் வெளிப்படையான நபர் அவர். ஒருமுறை ஒரு ஹாலிவுட் பார்ட்டியில் க்வெண்டின் டாரண்டினோ என்ற இளைஞரை வின்ஸ்டன் வுல்ஃப் சந்திக்கிறார். அப்போது அந்த இளைஞர், வுல்ப்பின் பெயர் மிகவும் நன்றாக உள்ளது என்றும், தனக்கு அது மிகவும் பிடித்திருப்பதாகவும் சொல்லிவிட்டு அங்கிருந்து அகல்கிறார். அதுதான் இந்த இருவருக்கும் நடந்த ஒரே சந்திப்பு. இதன்பின் பல வருடங்கள் கழித்து Pulp Fiction வெளியாகிறது. அப்போது ஸ்டார் வார்ஸ் கேமில் வேலைசெய்துகொண்டிருந்த வுல்ஃப், தனது டீமோடு இப்படத்துக்குச் செல்கிறார். முதன்முறை ஜிம்மியின் கதவு தட்டப்படுகிறது. திறந்தால் எதிரில் ஹார்வி கைடெலின் கதாபாத்திரம் நிற்கிறது. ‘I’m Winston Wolf – I solve problems’ என்று அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது இந்தக் குழுவினர் ஆச்சரியத்தில் உறைந்துபோய்விட்டனர். அப்போதுதான் நிஜ வுல்ஃப் அவர்களிடம் டாரண்டினோவைப் பல வருடங்கள் முன்னர் சந்தித்ததைப் பற்றிச் சொல்கிறார்!
இந்த அத்தியாயத்தில் Wolf அறிமுகமாகும் காட்சியில், அவர் ஒரு ஹோட்டல் ஸ்வீட் அறையில் இருக்கிறார். அவருக்கு ஒரு தொலைபேசி வருகிறது. அதில் மார்ஸெலஸ் வாலஸ் இவரிடம் பேசுகிறார். ஜிம்மியின் மனைவி வருவதற்குள் தலையில் தற்செயலாக சுடப்பட்டு இறந்த மார்வினின் உடலை அப்புறப்படுத்த வேண்டும்; காரை சுத்தப்படுத்த வேண்டும்; வின்ஸெண்ட்டையும் ஜூல்ஸையும் அங்கிருந்து அகற்ற வேண்டும். இதுதான் மார்ஸெலஸ் வால்ஸ் Wolfஉக்குச் சொல்லும் நிபந்தனைகள். அவற்றை Wolf ஏற்றுக்கொள்கிறார். அதன்பின் அவர் சொல்லும் வசனம் பிரசித்திபெற்றது. ‘It’s about thirty minutes away. I’ll be there in ten’. இதன்பின்னர் டைட்டிலில் “NINE MINUTES AND THIRTY-SEVEN SECONDS LATER” என்று காட்டப்படுகிறது. Wolf வந்துவிடுகிறார். அப்போதுதான் ஜிம்மியிடம் அவர் சொல்லும் I’m Winston Wolf, I solve problems வசனம் வருகிறது. இங்கேயே டாரண்டினோவின் வழக்கமான டைட் க்ளோஸப் காட்சியான அழைப்புமணியை அழுத்தும் விரலையும் காணலாம்.

அவர் வீட்டுக்கு வரும் நேரத்தில் இருந்து மிகச்சரியாக 45 நிமிடங்களில் ஜிம்மியின் மனைவி வந்துவிடுவாள். அதற்குள் காரை சுத்தப்படுத்தி, இருவரையும் அங்கிருந்து அனுப்பிவிடவேண்டும். இதனால் முதலில் நேராக காரேஜுக்கு செல்கிறார் Wolf. அங்கே ஜிம்மியிடம் தனக்குக் காபி ஒன்று வேண்டும் என்று சொல்லி, அது எப்படி இருக்கவேண்டும் என்றும் சொல்கிறார். ‘Lotsa cream, lotsa sugar’. உண்மையில் Wolf பாத்திரம் எப்படிப்பட்டது என்பதை இந்தக் காட்சியில் அவர் பேசும் வசனங்களிலேயே அறியலாம். அவர் அவசியம் நம்பகமானவர். தொழில்சுத்தம் உடையவர். வேலை வாங்குவதில் கில்லாடி. மதியூகி. எந்த விஷயத்தையும் ஒழுங்காகத் திட்டமிட்டு செய்பவர். இத்தனைக்கும் மேல், தனக்குத் தேவையான விஷயங்களை அடுத்தவரிடம் இருந்து பெறுவதில் தயக்கமே காட்டாதவர். இது எல்லாமே wolf அறிமுகமாகும் காட்சியின் முதல் சில நொடிகளில் நமக்குப் புரிந்துவிடும். இதுதான் டாரண்டினோவின் சிறப்பான கதாபாத்திர உருவாக்கம்.
இதன்பின் காரேஜிலிருந்து சமையலறைக்குச் சென்று, ஜிம்மி தரும் காஃபியை சுவைத்தபடியே அடுத்தகட்ட நடவடிக்கைகளை வின்ஸெண்ட்டுக்கும் ஜூல்ஸுக்கும் கட்டளையிடுகிறார் Wolf. முதலில் பிணத்தை டிக்கியில் வைப்பது; பின்னர் காரை சுத்தப்படுத்துவது; ஜிம்மியிடம் இருந்து விரிப்புகளையும் சுத்தம் செய்யப் பயன்படும் உபகரணங்களையும் வாங்கிக்கொண்டு இதைச் செய்வது. இதை இருவரிடமும் கண்டிப்பான தொனியில் Wolf சொல்கிறார். அப்போது வின்ஸெண்ட்டுக்கு அவரது தொனி பிடிப்பதில்லை. ‘நீங்கள் சொல்வதைக் கொஞ்சம் நல்ல தொனியில் சொல்லலாமே’ என்று பொருள்பட, ‘A “please” would be nice’ என்கிறான். உடனடியாக wolf பேசும் வசனத்தில் அவரது ஆளுமை எளிதில் புரிந்துவிடும்.
THE WOLF
Set is straight, Buster. I’m not here to say “please.” I’m here to
tell you what to do. And if self- preservation is an instinct you
possess, you better fuckin’ do it and do it quick. I’m here to help.
If my help’s not appreciated, lotsa luck gentlemen.
JULES
It ain’t that way, Mr. Wolf. Your help is definitely appreciated.
VINCENT
I don’t mean any disrespect. I just don’t like people barkin’
orders at me.
THE WOLF
If I’m curt with you, it’s because time is a factor. I think fast, I
talk fast, and I need you guys to act fast if you want to get out of
this. So pretty please, with sugar on top, clean the fuckin’ car
இந்தக் காட்சிக்குப் பிறகு, வின்ஸெண்ட்டும் ஜூல்ஸும் காரை சுத்தப்படுத்தும் நகைச்சுவையான காட்சி. இதில் வின்ஸெண்ட்டின்மீது எக்கச்சக்கக் கடுப்பில் இருக்கும் ஜூல்ஸ், வின்ஸெண்ட்டையே காரில் இருக்கும் சதைத்துணுக்குகளை சுத்தப்படுத்தச் சொல்லிக் கத்துவது வருகிறது. இதன்பின் இந்த இருவரையும் சுத்தப்படுத்தவேண்டும் என்று Wolf சொல்கிறார். இருவரையும் குளிப்பாட்டுகிறார். அப்போது ஜிம்மியின் மொக்கையான டிஷர்ட்களையும் ஷார்ட்ஸ்களையும் இருவரும் அணிய நேர்கிறது.
இந்த இடத்தில், திரைப்படத்தில் வெட்டப்பட்ட காட்சி ஒன்று உள்ளது. எல்லோருடனும் சேர்ந்து ஒரு க்ரூப் ஃபோட்டோ வேண்டும் என்று ஜிம்மி சொல்கிறான். இங்கே என்ன நடக்கிறது என்று இனி படித்துப் பார்க்கலாம்.
88. INT. JIMMIE’S GARAGE – MORNING 88.
The garbage bag is tossed in the car trunk on top of Marvin. The Wolf SLAMS is closed.
THE WOLF
Gentlemen, let’s get our rules of  the road straight. We’re going to
a place called Monster Joe’s Truck  and Tow. Monster Joe and his
daughter Raquel are sympathetic to  out dilemma. The place is North
Hollywood, so a few twist and turns  aside, we’ll be goin’ up Hollywood
Way. Now I’ll drive the tainted  car. Jules, you ride with me.
Vincent, you follow in my Porsche. Now if we cross the path of any
John Q. Laws, nobody does a fuckin’ thing ’til I do something.
(to Jules)
What did I say?
JULES
Don’t do shit unless —
THE WOLF
— unless what?
JULES
Unless you do it first.
THE WOLF
Spoken like a true prodigy.
(to Vincent)
How ’bout you, Lash Larue? Can you  keep your spurs from jingling and
jangling?
VINCENT
I’m cool, Mr. Wolf. My gun just  went off, I dunno how.
THE WOLF
Fair enough.
(he throws Vince his car keys)
I drive real fuckin’ fast, so keep up. If I get my car back any
different than I gave it, Monster Joe’s gonna be disposing of two
bodies.
JULES
Why do you drive fast?
THE WOLF
Because it’s a lot of fun.
Jules and Vincent laugh.
THE WOLF
Let’s move.
Jimmie comes through the door, camera in hand.
JIMMIE
Wait a minute, I wanna take a picture.
JULES
We ain’t got time, man.
JIMMIE
We got time for one picture. You and Vincent get together.
Jules and Vincent stand next to each other.
JIMMIE
Okay, you guys put your arms around each other.
The two men look at each other and, after a long beat, a smile breaks out. They put their arms around each other.
JIMMIE
Okay Winston, get in there.
THE WOLF
I ain’t no model.
JIMMIE
After what a cool guy I’ve been, I can’t believe you do me like this.
It’s the only thing I asked.
JULES & VINCENT
C’mon, Mr. Wolf….
THE WOLF
Okay, one photo and we go.
SLOW DOLLY TOWARD A LONE CAMERA
JIMMIE (OS)
Everybody say Pepsi.
JULES (OS)
I ain’t fuckin’ sayin’ Pepsi.
JIMMIE (OS)
Smile, Winston.
THE WOLF
I don’t smile in pictures.
The camera goes off, FLASHING THE SCREEN WHITE.
THE PHOTO FADES UP OVER WHITE.
it’s Jules and Vincent, their arms around each other, next to Jimmie’ whose arm is around The Wolf. Everyone is smiling except you-know-who.
இத்தோடு அந்தக் காட்சி முடிகிறது. பின்னர் Monster Joe’s Truck  and Towவில் காரை Wolf விட்டுவிட்டுச் செல்லும் காட்சி தொடர்கிறது. இதன்பின்னர் தான் படத்தின் கடைசிக் காட்சி. ரெஸ்டாரண்ட்டில் ஹனிபன்னி &பம்ப்கின்னின் கொள்ளையை ஜூல்ஸ் தடுப்பது. இதன்பின்னர் அங்கிருந்து இருவரும் சென்று மார்ஸெலஸ் வாலஸைச் சந்திக்கும் காட்சி. இது படத்தின் ஆரம்பத்தில் வருகிறது. அப்போதுதான் மார்ஸெலஸுடன் பேசிக்கொண்டிருக்கும் புட்ச் இருவரையும் பார்க்கிறான். புட்ச்சைக் குத்துச்சண்டையில் தோற்கச்சொல்லி வாலஸ் சொல்லும் காட்சி அதுதான்.
உண்மையில் இந்த அத்தியாயம் இல்லாமலேயே இந்தப் படம் நன்றாகத்தான் இருந்திருக்கும். ஆனாலும் இந்த அத்தியாயத்தை டாரண்டினோ வைத்தது ஏனெனில், இதில் இருக்கும் நகைச்சுவைக்காகவும், ஹார்வி கைடெலுக்கு ஒரு பாத்திரத்தைக் கொடுப்பதற்குமே. இதைப்போன்ற நீண்ட வசன அத்தியாயங்கள் வைப்பது டாரண்டினோவுக்குப் பழகிப்போன விஷயம்தான். இன்னும் அவரது பிற படங்களைப் பார்க்கும்போது இப்படிப்பட்ட பல அத்தியாயங்களைக் கவனிக்கப்போகிறோம்.
இப்படியாக, Pulp Fiction பற்றிய நமது விரிவான கட்டுரைகள் முடிவுக்கு வருகின்றன. Please do watch this video for the memorable quotes from Pulp Fiction.

CONVERSATION

Back
to top