font, blue, and ?ெ?்?ி?்??ி?ை ????்.

80's தமிழ்ப்படங்கள் -1

இன்று ஒரு டிவிடி கிடைத்தது. அதன் பெயர் – ‘இளையராஜா இசை சங்கமம்’. இது, ஐங்கரன் வெளியீடு. ஆண்டு – 2007. கேட்லாக் எண் – WRDVD – 279. அதில் மொத்தம் 43 பாடல்கள். முக்கால்வாசி எண்பதுகளில் வெளிவந்த படங்கள். முழுமையாக இன்று கேட்டேன். உடனே, நாஸ்டால்ஜியா போட்டுத் தாக்கியது. கேட்ட ‘மூடு’ வேறு அப்படி… உடனே என்னால் இப்பதிவை எழுதாமல் இருக்க இயலவில்லை. எனவே, இதோ . . . . . .. எண்பதுகளின் படங்களோ இசையோ பிடிக்காதவர்கள் உடனடியாக வெளியேறலாம்.
ரைட்டு. எண்பதுகள். எனது பள்ளி நாட்கள். நான் எல்.கே.ஜி சேர்ந்தது எனது மூன்றரையாவது வயதில். அதாகப்பட்டது ஆண்டு 1982வின் நடுப்பகுதி. மிகச்சரியாக அடுத்த ஓராண்டில் கபில்தேவ் உலகக்கோப்பை வென்றார். அதை விட்டுத் தள்ளுங்கள்.
எண்பத்தி இரண்டின் நடுப்பகுதியில் பள்ளி சேர்ந்தேனா.. எனது தாய்மாமன் நிர். இரண்டு – ஒரு இசைத்தட்டு நூலகம் வைத்திருந்தார் (அது இன்றும் உண்டு). இதன் மூலம், எந்தப் படம் வெளிவந்தாலும், அதன் இசைத்தட்டு (பெரிய வினைல் ரெக்கார்டு… கிராமஃபோன் இசைத்தட்டு போல் இருக்கும்.. 33 1/3 R.P.M அதாவது முப்பத்தி மூன்றரை ரொட்டேஷன் பெர் மினிட் என்ற விகிதத்தில் சுற்றினால், இசை ஒரு ஆம்ப்ளிஃபையர் மூலம் வெளியேறும்.. ஆடியோ காஸெட்டுகளின் முன்னோடி) வெளிவந்துவிடும். ஆடியோ காஸெட்டுகள், எண்பதுகளில் மிகப்பெரிய விஷயம். எனவே, இந்த இசைத்தட்டு நூலகங்களின் மூலம், இசைத்தட்டுகளில் இருந்து காஸெட்டுகளில் பதிவு செய்து கொள்வர் – ஸிக்ஸ்ட்டி மற்றும் நைண்ட்டி என்ற இரு காஸெட்டு வடிவங்கள் அன்று இருந்தன.. ஸிக்ஸ்ட்டி என்றால், ஒரு மணி நேரம்.. ஸிக்ஸ்ட்டி நிமிடங்கள். நைண்ட்டி – ஒன்றரை மணி நேரங்கள். இப்படிப் பட்ட கேஸெட்டுகளில் அந்நாட்களில் முதலிடம் வகித்தது டி- ஸீரீஸ். மிகத் தரமான ஒலிநாடாக்களை வெளியிட்டு, சாதனை படைத்தது இதன் சாதனை.
.எனவே, நேச்சுரலாக, எண்பதுகளின் நடுவில் இருந்து, தொண்ணூறுகளின் நடுப்பகுதிவரை, இந்த இசையின் நடுவேயே வாழ்ந்தேன். எந்தப் பாடலைக் கேட்டாலும், அப்படத்தை என்னால் சொல்ல முடியும். மட்டுமல்லாமல், அதைப் பாடியவர், இசையமைப்பாளர், படம் போன்ற அத்தனைத் தகவல்களையும் மிக இயற்கையாகப் பெற்றுக் கொண்டேன் – இந்த இசைத்தட்டுகளின் மூலம். இந்த இசைத்தட்டுகளின் பின்புறம், அத்தனைத் தகவல்களும் இடம் பெற்றிருக்கும்.
அந்தக் காலகட்டத்தில் எனக்குப் பிடித்த இசைத்தட்டுகளின் அத்தனை உறைகளையும், அந்த மாமாவிடம் இருந்து பெற்று, ஒரு நண்பரிடம் கொடுத்து வைத்திருந்தேன் (நான்கு ஆண்டுகள் முன் – அவைகளை ஸ்கேன் செய்யும் பொருட்டு.. இன்னமும் அவரிடம் அவை இருக்கும் என்று நம்புகிறேன்.. இம்முறை கோவை செல்லும்போது அவரைப் பார்க்க வேண்டும்.. பார்த்து மிக நீண்ட நாட்கள் ஆயிற்று).
இப்படி நான் கேட்டு இன்புற்ற இசைத்தட்டுகள் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கில் இருக்கும். இது மட்டுமல்லாமல், வரும் கஸ்டமர்களிடம், அவர்களது விருப்பமான பாடல்கள் அடங்கிய பட்டியலை வாங்கி, அதனைப் பதிவு செய்யும் திறனையும் பெற்றிருந்தேன்( கிட்டத்தட்ட மாமாவின் அப்ரசந்தி மாதிரி – இவையெல்லாமே எனது பள்ளி நாட்களில்).
அந்த இசைத்தட்டுகளில் சில: ABBA, MAN MACHINE, THRILLER, United Artists: Great Western Themes (இதில் பட்டையைக் கிளப்பும் என்னியோ மாரிக்கோனின் பல இசைக்கோர்ப்புகள் உண்டு), OSIBISA, BONEY M, BEATLES போன்ற பல ஆங்கில இசைக்கோர்ப்புகள் அடங்கும். மட்டுமல்லாது, பல ஹிந்தி ஆல்பங்களும் உண்டு – QURBANI, ARADHANA, TARZAAN, HERO, EK DUJE KELIYE, YAADON KI BAARAAT, KARZ, MUQADDAR KA SIKANDAR, AAKRI RASTAA (ஒரு கைதியின் டைரி – ஹிந்தியில் பாக்யராஜ் இயக்கிய முதல் படம் – சூப்பர் ஹிட்) போன்ற இன்னமும் நினைவுக்கு வராத படங்கள் ஏராளம்.
சரி. தமிழில் என்னய்யா கேட்டே என்பவர்களுக்கு – இதோ லிஸ்ட்.
ராஜபார்வை, நினைத்தாலே இனிக்கும் (MSV), எல்லாம் இன்பமயம், கைதியின் டைரி, உயர்ந்த உள்ளம், மிஸ்டர் பாரத், நான் சிகப்பு மனிதன் (ரஜினி நடித்து எனக்கு மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிகப் பிடித்த படம்.. இன்றும் – இதன் இசைத்தட்டின் பின்னட்டையில், ரஜினியும் பாக்யராஜும் தோளோடு தோள் சேர்ந்திருக்கும் மிக அழகான கறுப்பு வெள்ளைப் படம் இடம்பெற்றிருக்கும் – இப்படத்தில், ரயிலில் ராபின்ஹூட்டாகப் பயணிக்கும்போது, பேப்பர் படிப்பார் ரஜினி. அப்போது, ஒரே ஷாட்டில், மிக அனாயாசமாக, ஒரு பக்கத்தை விரிக்கும்போதே, வாயில் உள்ள சிகரெட்டை உள்ளங்கையில் ஒரே கையில் இருக்கும் தீக்குச்சியை உரசுவதன் மூலம் பற்ற வைப்பார்.. இது ‘ஸ்டைல்’ என்று அவர் செய்யும் வகையில் சேராது.. அது மிக சீரியஸான ஒரு ஸீன்.. அந்த ஷாட், மூன்று நொடிகளே வரும்.. மிக மிக சாதாரணமான ஒரு ஷாட். அது இவ்வாறு எழுதப்பட்டிருக்கலாம் – ‘ராபின்ஹூட், பேப்பர் படிக்கிறான். ஒரு பக்கத்தில் இருந்து, இன்னொரு பக்கத்தை விரிக்கிறான்’. அந்தக் காட்சியில் கூட இப்படி ஒரு பட்டையைக் கிளப்பும் விஷயம் – . இதனால் தான் ரஜினி சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்று அன்று புரிந்து கொண்டேன் – ஆனால் இதே போல் ஒரு ஷாட், Good bad and the uglyயில் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் செய்ததைக் கவனித்திருக்கிறேன்., அந்த ஷாட்டின் அட்டக்காப்பிதான் நான் சிகப்பு மனிதனில் வரும் ஷாட்), உன் கண்ணில் நீர் வழிந்தால் (பாலு மஹேந்திரா – ரஜினி கூட்டணியில் வெளிவந்த ஒரு நல்ல – ஆனால் ஃப்ளாப் திரைப்படம்). சலங்கை ஒலி, வாழ்வே மாயம் (இசை: கங்கை அமரன்), சத்யா, நல்லவனுக்கு நல்லவன், முரட்டுக்காளை, கல்யாணராமன், ஜப்பானில் கல்யாணராமன் (ராதே என் ராதே – மறக்க முடியாத பாடல் – அப்பாடலைப் பாடியவரின் பெயரும் ராஜேஷ் தான்.. மனோவின் குரலை நினைவு படுத்தும் ஒரு குரல்), ஊமை விழிகள் (மனோஜ் கியான் – இந்த மனோஜ் தான் மனோஜ் பட்நாகர் என்ற பெயரில், என்றென்றும் காதல் என்ற படுமொக்கையான விஜய் படத்தை இயக்கியவர்), முள்ளும் மலரும் (இத்தலைப்பில் இருக்கும் கவிதையை மிக நீண்ட காலத்துக்குப் பின் தான் கவனிக்க ஆரம்பித்தேன்), வேலைக்காரன், படிக்காதவன், மாவீரன், நாயகன்…….ஆஹா… லிஸ்ட் கண்டின்யூஸ்..
இது மட்டுமல்லாது, ஏழாவது மனிதன் (எல். சுப்ரமண்யம் இசை – ரகுவரனின் முதல் படம் – ஹரிஹரன் இயக்கம் – இதில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் பாரதியார் பாடல்கள் – காக்கைச் சிறகினிலே நந்தலாலா – யேசுதாஸ் – நினைவிருக்கிறதா?).
இப்படிப்பட்ட இசையின் நடுவே நான் முழுகியதாலோ என்னவோ, எந்தப் பாடல் கேட்டாலும் அதன் புள்ளி விபரங்களைக் கடகடவென்று கொட்டக்கூடியவனாக வளர்ந்தேன்.
ஓகே. இவ்வளவு நீளமான பதிவின் காரணம், நான் பார்த்த அந்த டிவிடி. ‘இளையராஜா இசை சங்கமம்’. இது, ஐங்கரன் வெளியீடு. ஆண்டு – 2007. கேட்லாக் எண் – WRDVD – 279.
இந்த டிவிடியின் முதல் பாடல், ‘கொடியிலே மல்லிகைப்பூ’ – கடலோரக் கவிதைகள். பட்டையைக் கிளப்பும் படம். அட்டகாசமான பாடல். அடுத்த பாடல், ‘பூங்கதவே தாழ்திறவாய்’ – நிழல்கள். அடுத்தது, ‘அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன் – முதல் மரியாதை’. பின்னர், ’பொத்திவெச்ச மல்லிக மொட்டு – மண்வாசனை’. இதற்குப் பின், ‘அடி ஆத்தாடி’ – கடலோரக் கவிதைகள். உடனேயே ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே ’– அலைகள் ஓய்வதில்லை, பின் ‘பூங்காற்று ’ – மூன்றாம் பிறை, ‘மௌனமான நேரம்’ – சலங்கை ஒலி, ’ஒரு இனியமனது’ – ஜானி, ‘ஏதோ மோகம்’ – கோழி கூவுது, ’மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’ – நானே ராஜா நானே மந்திரி, ‘பேசக்கூடாது ‘ – அடுத்த வாரிசு (ஸ்ரீதேவியின் கடைசி தமிழ்ப்படம் – ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்தபின் உள்ள ‘ஹிந்தி’ ஸ்ரீதேவியை இதில் காணலாம்), ’வளையோசை’ – சத்யா, ’வானிலே தேனிலா’ – காக்கிசட்டை, ’ஓம் நமஹா’ – இதயத்தைத் திருடாதே (எனக்குப் பிடிக்காத ஒரு அட்டக்காப்பி இயக்குநர் – மணிரத்னம். காப்பியடிக்காமல் இவர் எடுத்த படங்கள் ஒன்றுகூட இல்லை – இதயக் கோயில் என்ற மொக்கைப்படம் ஒருவேளை இவர் ஒரிஜினலாக எடுத்திருக்கலாம் – அந்த இசைத்தட்டு அட்டையில், சோடாபுட்டிக் கண்ணாடி போட்டு, ‘மணிரத்தினம்’ என்ற பெயர் தாங்கி இவரது ஃபோட்டோ வெளிவந்தது எனக்குப் பசுமையாக நினைவிருக்கிறது).
இன்னமும் பல பாடல்கள் அதில் இருந்தன. அவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் எனக்குத் தோன்றிய எண்ணம் – ‘இளையராஜா.. இப்ப எங்கய்யா இருக்கீங்க?’.

CONVERSATION

Back
to top